கொஞ்சம் வருசத்துக்கு முன்ன என்ன திரும்பி பாத்தா – புற்றுநோய் பாதிப்பு குறித்து காதலர் தினம் பட நடிகை. ச்ச, எப்படி இருந்தாங்க.

0
2366
sonal
- Advertisement -

புற்றுநோயில் இருந்து மீண்டது குறித்து காதலர் தினம் பட நடிகை உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘பம்பாய்’ படத்தில் ‘ஹம்ம ஹம்மா’ என்ற பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமான நடிகை சோனாலி பிந்த்ரே. இந்தி நடிகையான இவர் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் குணால் நடித்த ‘காதலர் தினம்’ நடிகர் அர்ஜுன் நடித்த ‘கண்ணோடு காண்பதெல்லாம் ‘ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Sonali bendrey

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் முன்னர் தனக்கு புற்றுநோய் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சோனாலி தெரிவித்திருந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நியூயார்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை சோனாளி கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வந்தார். தனக்கு புற்று நோய் இருப்பதை அறிந்த நண்பர்களும் உறவினர்களும் அடிக்கடி தமக்கு போன் செய்து நலம் விசாரித்து தனக்கு ஆறுதலாக இருந்து வருவதாக கூறியிருந்தார்.

- Advertisement -

கீமோ சிகிச்சைக்காக மொட்டை அடித்தார். அப்போது அவர் கண்ணீர்விட்டபடி உருக்கமாக பேசியிருந்தார். பிறகு சிகிச்சைக்குப் பின் விக் வைத்துக்கொண்டு, புதிய தோற்றத்தில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். கீமோதெரபி சிகிச்சை காரணமாக கண்கள் பாதிக்கப்பட்டது என்று அவர் திடுக்கிடும் தகவலை தெரிவித்து இருந்தார்.

பின்னர் அதில் இருந்தும் குணமடைந்தார். இப்படி ஒரு நிலையில் புற்று நோயில் இருந்து மீண்டது குறித்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், நேரம் எப்படி பறக்கிறது, இன்று நான் திரும்பிப் பார்க்கும்போது, ​​நான் பலத்தைக் காண்கிறேன், பலவீனத்தைக் காண்கிறேன், ஆனால் மிக முக்கியமாக சி சொல் அதற்குப் பிறகு என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை வரையறுக்க அனுமதிக்காத விருப்பத்தை நான் காண்கிறேன். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையை நீங்கள் தான் உருவாக்குகிறீர்கள். பாதையையம் நீங்கள் தான் உருவாக்கியது. எனவே, நினைவில் கொள்ளுங்கள் ஒரு நாள் இல்லை ஒரு நாள் இந்த முடிவை எடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement