குடும்பம், புள்ளகுட்டி – பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் காதலிக்க நேரமில்லை சீரியல் நடிகை சந்திரா.

0
616
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “காதலிக்க நேரமில்லை” என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த நடிகை சந்திரா லக்ஷ்மன். கிட்டத்தட்ட ஐந்து ,ஆறு ஆண்டுகள் கழித்து தமிழில் ‘கயல்’ தொடரின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து இருக்கும் சந்திரா லக்ஷ்மன் ,சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டிங் ஆகியுள்ளது.’காதலிக்க நேரமில்லை’ தொடரை தொடர்ந்து தமிழில் கோலங்கள், வசந்தம், சொந்த பந்தம், பாசமலர் போன்ற சீரியல்களிலும் கலக்கி வந்த அருணா லக்ஷ்மன், சின்னத்திரை மட்டுமல்லாமல் தமிழில் ஸ்ரீகாந்த் நடிப்பில் “மனசெல்லாம்”படத்தில் ஸ்ரீகாந்த்திற்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாள சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வந்தார் சந்திர லக்ஷ்மன்.

-விளம்பரம்-

சந்திரா லக்ஷ்மன் நடிப்பில் பிரேக் எடுத்தது பற்றி கூறுகையில், “நானும் சென்னை பொண்ணுதான், நான் படிச்சது என்னுடைய கெரியர் தொடங்கியது எல்லாமே இங்கதான்” என்று சந்தோஷமாக கூறியுள்ளார். தமிழில் ஒளிபரப்பான “பாசமலர்” தொடர் முடிந்ததும் பிரேக் எடுக்கலாம் என்று நினைத்தாராம் ஆனால், அதே சமயத்தில் மலையாளத்தில் “ஸ்வந்தம் சுஜாதா” என்ற ஒரு தொடரில் கமிட் ஆனதாகவும் , அதே சீரியலில் 100வது எபிசோடில் செகண்ட் ஹீரோவாக என்ட்ரி ஆன ‘டோஸ் கிரிஸ்டி’ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு, ‘அயான்’ என்ற மகன் இருப்பதாகவும் அவருடன் நேரம் செலவழிக்க முடிவு செய்து பிரேக்கில் இருந்தாராம்”

- Advertisement -

இதனைத் தொடர்ந்து, சில மாதங்கள் கழித்து தமிழில் ரீ என்ட்ரி கொடுக்க விரும்பியதாகவும், தனக்கு வந்த கேரக்டர்கள் எல்லாம் முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததாகவும் கூறியுள்ளார். அதே சமயத்தில் தெலுங்கில் ஒரு ப்ராஜெக்ட் வந்ததாகவும் அந்த பிராஜெக்ட்டில் மொத்தம் அதிகபட்சம் எட்டு நாட்கள் தான் டேட்ஸ் என்பதால், தனது குழந்தை தன்னை விட்டு இருப்பானா என்பதை டெஸ்ட் பண்ணுவதற்காக அதை ஒப்புக் கொண்டாராம். அந்த சமயத்தில் அவரது கணவர் பிரேக்கில் இருந்ததால் தனது குழந்தையை பார்த்துக் கொண்டார் என்று சந்திரா லக்ஷ்மன் கூறியுள்ளார்.

தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் சந்திரா லக்ஷ்மன்:

மேலும் கயல் சீரியலில் தான் ரீ என்ட்ரி கொடுப்பதை பற்றி கூறிய சந்திர லக்ஷ்மன், அவர் நடித்த ‘ஸ்வநதம் சுஜாதா’, ‘வசந்தம்’ போன்ற சீரியல்கள் பண்ணின விஷன் டைம் புரொடக்சன் தான் ‘கயல்’ சீரியல் பண்ணுவதாகும், தான் கடைசியாக நடித்த சீரியல் வரை கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இவங்க முக்கியமான கேரக்டர் என்று சொன்னதால் ஓகே சொன்னேன், என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

சந்திரா லக்ஷ்மனின் பிரக்னன்சி ஜர்னி:

அதனைத் தொடர்ந்து தனது பிரக்னன்ஸி ஜெர்மனி பற்றி அருணா லக்ஷ்மன் கூறுகையில், தனக்கு 38 வயதில் திருமணம் ஆனதாகவும், கடவுள் துணையால் இரண்டே மாதத்தில் தான் கர்ப்பம் அடைந்ததாகவும் பூரிப்போடு பகிர்ந்திருந்தார். தனக்கு பிரக்னன்சி சார்ந்த எந்த பிரச்சினையும் இல்லை என்றும் தனது மகன் பிறப்பதற்கு மூன்று நாட்கள் முன்னாடி வரைக்கும் நடிச்சிட்டு இருந்ததாகவும் கூறியிருந்தார். அவர் எப்போதும் பிசிக்கல் ஆகவும் மெண்டல் ஆகவும் ஆக்டிவா இருப்பார் எனவும் தனது மகனை ‘ஹீலர்’ என்று தான் அழைப்பேன் என்றும், சோர்வாக இருக்கும் போது ‘பாப்பா எனக்கு எனர்ஜி கொடு’என்று கேட்பேன்,என்றும் சந்தோஷமாக பகிர்ந்து இருந்தார்.

‘காதலிக்க நேரமில்லை’ தொடரை பற்றி சந்திரா கூறியது:

தான் நடித்து பிரபலமாகிய ‘காதலித்து நேரமில்லை’ தொடரைப் பற்றி அவர் கூறுகையில், எல்லா ஜெனரேஷனுக்கும் பிடித்து பல வருஷமா ட்ரெண்டா இருக்குற ஒரே பாட்டுன்னா அது ‘காதலித்து நேரமில்லை’ சீரியல் ஓட டைட்டில் சாங் தான் எனவும் அந்தப் பாட்டு மட்டுமல்ல அந்த ப்ராஜெக்ட்டும் ஸ்பெஷல் தான் என்று கூறியுள்ளார். மேலும் ‘லிப்பின் சப்ஜெக்ட்’ ல் எடுத்த முதல் சீரியல் என்றும் இதுவரை யாரும் அப்படி எடுக்கவில்லை என்றும் பகிர்ந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சந்திரா ,அந்த சீரியலின் டைட்டில் சாங் ,சிங்கப்பூரில் சீரியலின் முதல் செட்யூல்க்காக போயிருக்கும் போது, தான் தங்கியிருந்த ஹோட்டலின் ரிசப்ஷனில் இருக்கும் கம்ப்யூட்டரில் தான் கேட்டதாகவும், முதல் தடவை கேட்கும் போதே அவருக்கும் பரிஜினுக்கும் மனசுல பதிந்துவிட்டது என்று கூறியிருந்தார்.

சந்திரா லக்ஷ்மனை புகழ்ந்து பேசிய விஜய் ஆண்டனி:

மேலும் அவர் கூறுகையில், தாமரையின் அழகான வரிகளிலும்,சங்கீதாவின் குரலிலும் அந்த பாடலை கேட்கவே இனிமையாக இருக்கும் என்றும் விஜய் ஆண்டனி சார் அந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு தடவை ஹைதராபாத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை சந்தித்தபோது அவர் “இந்தப் பாடலுக்கு நீங்களும் பரிஜினும் அவ்ளோ ஜஸ்டிஃபிகேஷன் கொடுத்து இருக்கீங்க”, என்று புகழ்ந்ததாகவும்,புன்னகையோடு கூறியுள்ளார்.

‘கயல்’ தொடரில் அருணா லக்ஷ்மன்:

கயல் தொடரை பற்றி அருணா லக்ஷ்மன் கூறுகையில் ,அவர் ‘ராஜலட்சுமி’ என்கிற கதாபாத்திரத்தில் தொடர்ந்து கண்டினியூ ஆகுற மாதிரியான கேரக்டரில் நடிப்பதாகவும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் ஃப்ரண்ட்லியாக பழகுவதாகவும் ஷூட்டிங் பிஸியாக போய்க்கொண்டிருக்கிறது என்றும் பெருமிதத்தோடு கூறியிருக்கும் இவர் இப்பொழுது தெலுகு மற்றும் மலையாள சீரியல்களிலும், டிவி ஷோக்களிலும் பிசியாக உள்ளார்.

Advertisement