இவங்க தலைய எடுக்கறவங்களுக்கு லைப் டைம் செட்டில்மண்ட் என்ற வசனத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த சில மாதத்திற்கு முன்னர் வெளியாகி இருந்த கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த அர்ஜுன் தாஸ் தனது கம்பீரமான குரல் மூலமும் அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்திருந்தார்.
இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவு பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மேலும், இவர் விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் வில்லனுக்கு டப்பிங் கொடுத்து இருந்தார். அப்போதே இவரது குரலுக்கு பலர் ரசிகர்களானார்கள்.
இந்த நிலையில் அர்ஜுன் தாஸ் பேசியதாக ஒரு வசனத்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.அன்பா இருந்தாலும் சரி ஆப்பா இருந்தாலும் சரி. எப்பவுமே பெருசா வைக்கணும். அப்போதான் நம்பல எப்பவுமே மறக்க மாட்டாங்க என்பது தான் அந்த வசனம். உண்மையில் அர்ஜுன் தாஸ் அந்த வசனத்தை எந்த படத்திலும் பேசவில்லையாம். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அர்ஜுன் தாஸ்.
அதில், என்னோட இன்ஸ்டா குடும்பத்திற்கு வணக்கம் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் உங்ககிட்ட இருந்து எனக்கு ஒரு பெரிய உதவி தேவைப்படுது மெசேஜ்ல நிறைய பேர் என்கிட்ட இந்த டயலாக் பற்றியும் இது எந்த படத்துல வர்ற தோன்றும் கேட்டுகிட்டே இருக்காங்க ஆனா ஞாயமா சொல்லனும்னா எனக்கே தெரியாது ஏன்னா அது என்னோட பொருளும் இல்லை இந்த டயலாக் நான் எங்கும் சொன்னது இல்ல இதுல என்னோட போட்டோ போட்டு ஷேர் பண்ற உங்களோட அன்பிற்கு நன்றி.
இந்த குரலோடு உண்மையான சொந்தக்காரர் உங்களுக்கு தெரிந்தவராக இருந்தால் தயவு செய்து எனக்கு கொஞ்சம் தெரியபடுத்துங்கள் ஏன்னா நிறைய பேருக்கு இந்த டயலாக் ரொம்ப பிடிச்சிருக்கு என்று என்னால புரிஞ்சுக்க முடியுது அப்போ அதற்கான அங்கீகாரமும் பாராட்டுக்களும் அவளுக்குத்தான் போய் சேரணும் என்று நான் ஆசைப்படுகிறேன் சீக்கிரமா இந்த டயலாக் மற்றும் இந்த குரல் ஓட உண்மையான சொந்தக்காரர் நேரில் சந்தித்து காத்திருக்கிறேன் அதுக்கு நீங்க உதவும் என்று நம்புகிறேன் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.