கைதி பட நடிகர் ஜார்ஜ் மரியானின் மகனா இது ? அட அவரும் ஒரு நடிகர் தான். வைரலாகும் புகைப்படம் இதோ.

0
276
georgemariyan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்பவர் ஜார்ஜ் மரியன். இவர் மேடை நாடகங்களின் மூலம் தான் தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார். பின் இயக்குனர் சுந்தர் சி. எ ஏஎல். விஜய், பிரியதர்ஷன் போன்ற இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார். அதற்குப் பிறகு நடிகர், இயக்குனருமான பார்த்திபன் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த அழகி திரைப்படத்தின் மூலம் தான் ஜார்ஜ் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் படங்களில் துணை வேடங்களில், நகைச்சுவை வேடங்களில் தான் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும் இவருடைய நகைச்சுவை எல்லாமே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இருக்கும். கலகலப்பு படம் முதல் சமீபத்தில் வந்த நாய் சேகர் படம் வரை என அனைத்திலும் இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அதுமட்டும் இல்லாமல் பொய் சொல்ல போறோம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் போன்ற படங்களில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. பின் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கைதி படத்தில் கதாநாயகனுக்கு நிகராக இவருடைய நடிப்பு இருந்தது. சமீபத்தில் ஜார்ஜ் மரியான் நடிப்பில் வெளிவந்த நாய் சேகர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இதையும் பாருங்க : தே*, நீலாம் மதுர பொண்ணுன்னு சொல்லாத’ பார்வதி வெளியிட்ட புகைப்படத்தால் திட்டிய நபர் – பார்வதியின் பதிலை பாருங்க.

- Advertisement -

ஜார்ஜ் மரியான் நடித்த நாய் சேகர் படம்:

இந்த படத்தை இயக்குனர் கிஷோர் குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சதீஷ், பவித்ரா லட்சுமி, ஸ்ரீமன், லிவிங்ஸ்டன், இளவரசு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். கல்பாத்தி எஸ்.அகோரமின் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பக்கா என்டர்டெயின்மென்ட் படமாக நாய் சேகர் படம் அமைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேபோல் கமல்ஹாசன் நடிப்பில் வரவிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் ஜார்ஜ் நடித்து உள்ளார்.

ஜார்ஜ் மரியான் மகன் நடிக்கும் படம்:

இப்படி ஒரு நிலையில் நடிகர் ஜார்ஜ் மகன் நடிக்கும் படம் பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. நடிகர் ஜார்ஜ்க்கு மகன் இருக்கிறார். தற்போது அவர் தோளுக்கு மேல் வளர்ந்து விட்டார் என்றே சொல்லலாம். இவருடைய மகன் பெயர் பிரிட்டோ. இவரும் தற்போது சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். சில படங்களில் அவர் நடித்து கொண்டிருக்கிறார். அதோடு ஜார்ஜ் மகன் பிரிட்டோ கதாநாயகனாக தூங்கா கண்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 70 வருடங்களுக்கு முன்பு திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் படம்.

-விளம்பரம்-

தூங்கா கண்கள் படம்:

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் இதுவரை தமிழ் சினிமா பார்க்காத ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. தென்தமிழகத்தில் “வாதை” என்று அழைப்பார்கள். இந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து சஸ்பென்ஸ், த்ரில்லர், ஹாரர் கலந்த பாணியில் தூங்கா கண்கள் படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை வினு இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் பிரிட்டோ சினிமா உலகிற்கு அறிமுகமாகிறார். அதுமட்டுமில்லாமல் ஜார்ஜ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

தூங்கா கண்கள் படத்தின் பிற நடிகர்கள்:

இவர்களுடன் களவாணி துரை சுதாகர், நிக்கேஷ், த.வினு, ஹாலோ கந்தசாமி, காஞ்சனா ரமேஷ், டாக்டர் பிரபு ஆகியோர் நடிக்கிறார்கள். அதேபோல் அப்சரா, ரேஷ்மா இருவரும் கதாநாயகிகளாக இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாக இருக்கிறார்கள். இந்த படத்திற்கு இளங்கோ கலைவாணன் இசையமைத்துள்ளார். ஏ எல் ரமேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு செங்கோட்டை, நாகர்கோவில், சென்னை மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் நிறைவு பெற்றிருக்கிறது. இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement