கைதி படத்திற்க்கு முன்பாகவே அர்ஜுன் தாஸை என் படத்தில் நடிக்க வைத்தேன் – பிரபு சாலமன் கொடுத்த ஷாக்.

0
1871
- Advertisement -

இவங்க தலைய எடுக்கறவங்களுக்கு லைப் டைம் செட்டில்மண்ட் என்ற வசனத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த சில மாதத்திற்கு முன்னர் வெளியாகி இருந்த கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த அர்ஜுன் தாஸ் தனது கம்பீரமான குரல் மூலமும் அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்திருந்தார்.

-விளம்பரம்-
Big Breaking - Music director of Kumki 2 is here - Kumki 2- Prabhu ...

இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவு பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மேலும், இவர் விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் வில்லனுக்கு டப்பிங் கொடுத்து இருந்தார். அப்போதே இவரது குரலுக்கு பலர் ரசிகர்களானார்கள்.

- Advertisement -

ஆனால், இவருக்கு பெரும் பேரும் புகழும் கிடைத்தது கைதி படத்தில் தான். இந்த நிலையில் கைதி படத்திற்க்கு முன்பாகவே அர்ஜுன் தாஸை தனது படத்தில் நடித்து வைத்துள்ளதாக பிரபல இயக்குனர் பிரபு சாலமன் கூறியுள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் பிரபு சாலமன் கவிதை படத்திற்கு முன்பாகவே நான் அர்ஜுன் தாஸை எனது படத்தில் கமிட் செய்துவிட்டேன். கும்கி முடித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து கும்கி 2 படத்தில் ரகுவரன் போன்ற ஒரு குரலை உடைய ஒரு வில்லனை நடிக்க வைக்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன்.

வீடியோவில் 17 நிமிடத்தில் பார்க்கவும்

அப்போதுதான் என்னுடைய நண்பர் அர்ஜுன் தாஸ் அறிமுகம் செய்து வைத்தது ஞாபகம் வந்தது அதன் பின்னர் எனது நண்பருக்கு போன் செய்து அவரை கொஞ்சம் அனுப்புங்கள் என்று சொன்னேன். அதன்பின்னர்தான் அவர் கும்கி 2 படத்தில் நடித்தார். ஆனால், கும்கி 2 வெளியாவதற்கு முன்பாகவே கைதி படம் வெளியாகிவிட்டது. கும்கி 2வில் அவர் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார் பிரபு சாலமன்.

-விளம்பரம்-
Advertisement