அட்லீயை போல கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய லோகேஷ் – அட்லீயுடன் ஒப்பிட்டதால் கடுப்பான தயாரிப்பாளர்.

0
2047
- Advertisement -

தமிழ் சினிமாவில் காப்பி கேட் என்று கலாய்க்கப்பட்டு வரும் அட்லீயுடன் லோகேஷ் கனகராஜுடன் ஒப்பிட்டதால் கடுப்பாகி இருக்கிறார் தயாரிப்பாளர். சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் அட்லீ. ஆரம்பத்தில் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த அட்லீ கடந்த 2013ம் ஆண்டு ஆர்யா,ஜெய் நடிப்பில் வெளிவந்த ‘ராஜா ராணி’ படத்தை இயக்கினார். இந்த படம் அட்லீ தமிழ் சினிமா உலகில் முதலில் இயக்கிய படமாகும். பின் ராஜா ராணி படத்தைத் தொடர்ந்து அட்லீ தளபதி விஜய் அவர்களின் “தெறி” படத்தை இயக்கினார்.

-விளம்பரம்-

அட்லீ இயக்கிய முதல் படமான ராஜா ராணி துவங்கி இறுதியாக வெளியாக பிகில் படம் வரை அட்லீ இயக்கும் படங்களின் காட்சிகள் காபி தான் என்று பல ஆதாரங்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். ராஜா ராணி – மௌன ராகம், தெறி – சத்ரியன். மெர்சல் – அபூர்வ சகோதரர்கள் பிகில் – சக்தே இந்தியா என்று பல கிண்டல்கள் அட்லீ மீது முன்வைக்கப்பட்டு தான் வருகிறது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கனகராஜை மினி அட்லீ என்று குறிப்பிட்டு வெளியான செய்தியால் கடுப்பாகி இருக்கிறார் கைதி பட தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தை இந்தியில் எடுக்கவும் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் ‘கைதி 2’ படமும் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியானது.

இப்படி ஒரு நிலையில் கைதி படத்தை வேறு மொழிகளில் எடுக்கவும் இரண்டாம் பாகம் எடுக்கவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராஜீவ் ரஞ்சன் என்பவர் தான் எழுதிய கதையை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவிடம் கூறியதாகவும் கதை பிடித்திருந்ததால், இக்கதையை படமாக்க எஸ்.ஆர்.பிரபு ஒப்புதல் வழங்கியதோடு அதற்கான முன் தொகையாக ரூ.10 ஆயிரத்தை தன்னிடம் வழங்கியதாகவும் ஆனால், லோகேஷ் கனகராஜை வைத்து இந்த படத்தை எடுத்துவிட்டதாகவும் புகார் அளித்து இருந்தார்.

-விளம்பரம்-
தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு

மேலும், தான் சொன்ன கதையை வைத்து இரண்டாம் பாகத்தையும் உருவாக்கி இருப்பதாகவும் இதனால் தனக்கு நஷ்ட ஈடாக 4 கோடி ரூபாயை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வழங்க வேண்டுமெனவும், கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்றத்தில் ராஜீவ் ரஞ்சன் புகார் அளித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த செய்தியை பிரபல செய்தி சேனல் ஒன்று வெளியிட்டது. அதில், கைதியிடம் களவாடிய கதை கைதி..! –மினி அட்லியான லோகேஷ் கனகராஜ் என்று தலைப்பை கொடுத்து இருந்தனர்.

இதனால் கடுப்பான கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ஒரு வழக்கின் முழு விபரம் கூட அறியாமல் ஒரு இயக்குனரை களங்கப்படுத்தி செய்தி பதிவது கேவலமான செயல். அதை ஒரு செய்தி நிறுவனம் செய்வது அதனினும் மோசமானது. அட்மினுக்கு அறிவுறுத்துங்க ஐயா என்று காட்டமாக பதிவிட்டுள்ளார் எஸ் ஆர் பிரபு.

Advertisement