‘அது வரம்’ விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்த கைதி வில்லன் அர்ஜுன் தாஸ்.

0
9556
arjun-Das
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த சில மாதத்திற்கு முன்னர் வெளியாகி இருந்த கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த அர்ஜுன் தாஸ் தனது கம்பீரமான குரல் மூலமும் அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்திருந்தார் இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவு பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

-விளம்பரம்-

பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது கைது பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோஹனனும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே எகிறி இருக்கிறது அதிலும் கைது படத்தில் அசத்திய அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி இருப்பதால் படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு குறைவே இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : அந்த படம் வந்தா என் ரேஞ்ஜே வேறன்னு போய் சொல்லுங்க. இயக்குனரிடம் கூறியுள்ள அஜித்.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகர் அர்ஜுன் தாஸ் பேட்டி ஒன்றில் பேசியதாவது விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் இவ்வளவு சீக்கிரமாக வாய்ப்பு கிடைக்கும் என்பதை இதுவரை என்னால் நம்ப முடியவில்லை. மேலும், என்னுடைய கைது படத்தை விஜய் சார் பார்த்தார் அவர் பார்த்துவிட்டு சொன்னதை நான் இப்போது கூற முடியாது. அது மிகவும் பர்சனல். அதே போல விஜயுடன் நடித்த இந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது என்று கூறியுள்ளார் அர்ஜுன் தாஸ். மேலும், மாஸ்டர் படம் முடியும் வரை வேறு எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகவில்லை என்றும் கூறியிருக்கிறார் அர்ஜுன் தாஸ்.

-விளம்பரம்-

இது ஒருபுறமிருக்க மாஸ்டர் படத்தில் இருந்து முதல் பாடல் இன்று மாலை வெளியாக இருக்கிறது என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ‘ஒரு குட்டி கதை’ என்ற அந்த பாடலை தளபதி விஜய் தான் பாடியிருக்கிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே. அனிருத் இசையில் விஜய் பாடிய செல்பிபுள்ள பாடல் மாபெரும் ஹிட் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த பாடல் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisement