பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட நபர்..! வைரல் வீடியோ

0
828
Kajal
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகளிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது உலக நாயகன் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’படத்திலும் கமிட் நடித்து வருகிறார்.சமீபத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு பொது மேடையில் நடன கலைஞர் ஒருவர் முத்தம் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படித்தியுள்ளது.

நடிகை காஜல் அகர்வால் தற்போது ரமேஷ் அரவிந்த் இயக்கி நடித்து வரும் பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து வருகிறார். அது போக தெலுங்கு நடிகர் ஸ்ரீனிவாஸ் நடித்துள்ள ‘கவாச்சம்’ என்ற புதிய திரைப்படத்தில் காதநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ‘கவாச்சம்’ படத்தில் நடித்த ஸ்ரீனிவாஸ், மெஹரீன் பிரசாத், படத்தின் நடன இயகிக்குனர் சோட்டா கே நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

இந்த படத்தின் டீஸர் வெளியிட்டு விழாவில் பேசிய நடிகை காஜல் அகர்வால் படத்தில் நடித்திருந்த அனைத்து கலைஞர் களுக்கு நன்றி தெரிவித்து கொண்டிருந்தார். அப்போது படத்தில் நடன இயக்குனராக பணியாற்றிய சோட்டா கே நாயுடுவின் பெயரை குறிப்பிட்டதும், மேடையில் நின்றுகொண்டிருண்ந்த சோட்டா கே நாயுடு காஜல் அகர்வாலின் அருகில் வந்து அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டார். இதனால் செய்வதறியாது நின்ற காஜல் அகர்வால் சகஜமாக இருப்பது போன்று மேடையில் அட்ஜஸ்ட் செய்து விட்டார்.

Advertisement