பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த “இந்தியன் ” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டவது பாகம் தற்போது மும்மரமாக தயாராகி வருகிறது.நடிகை காஜல்
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஆரம்ப பணிகளும் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் பின்னர் கஜால் அகர்வால் கதாநாயகியாக கமிட் ஆகினார் என்ற தகவல்கள் வெளியாகின
இந்நிலையில் இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை பற்றி நடிகை காஜல் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,
நான் ஒரு படத்தில் நடிக்கிறேன் என்றால் அதில் ஏதோ ஒரு விஷயம் ஆர்வத்தை ஏற்படுத்துகிற மாதிரி இருக்க வேண்டும். செய்கிற வேலை புதுமையாக இருக்க வேண்டும். கதைக்கு முக்கியத்துவம் இருக்கிறதா? என்று பார்ப்பேன். அதற்காக கதையில் நான் வலிய சென்று மூக்கை நுழைக்க மாட்டேன்.
எப்போதும் வித்தியாசமான கதைகள் நம்மை தேடி வராது. எனவே வருகிற கதைகளில் வித்தியாசமாக செய்யும் ஆர்வத்தில் நடிப்பேன். அந்த வகையில் தற்போது இந்தியன் 2 படத்தில் நடிக்கிறேன். அதில் என்னை புதுமையாக பார்க்கலாம்” என்று கூறியுள்ளார்.