காஜலுக்கு துவங்கியது இந்தியன் 2 படத்திற்கான மேக்கப். புகைப்படத்தை வெளியிட்ட காஜல்.

0
96067
kajal

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த படம் “இந்தியன்”. இந்த திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. தற்போது 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், இந்த ‘இந்தியன் 2’ படம் அதிகபட்ச செலவில் எடுக்கப் போவதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

Image result for Indian 2 kajal

- Advertisement -

இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் அவர்கள் அப்பா கமலின் மனைவி வேடத்தில் 80 வயது பாட்டியாக நடிக்கிறார். அதாவது இந்தியன் முதல் பக்கத்தில் சுகன்யா நடித்த கதாபாத்திரம். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஆர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் சித்தார்த் அவர்கள் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்கிறார். நடிகர் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சமீபத்தில் கமலஹாசன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் ஓய்வுக்கு பின் தற்போது மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் இணைந்து உள்ளார். ஆகவே இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தற்போது சென்னை அருகே உள்ள தனியார் ஸ்டுடியோவில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனியார் ஸ்டுடியோவில் கமல் மற்றும் காஜல் அகர்வால் சம்பந்தமான காட்சிகள் தற்போது எடுக்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் காஜல் அகர்வால் அவர்கள் இந்தியன் 2 படத்தில் தன்னுடைய கெட்டப் குறித்த புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு உள்ளார்.

-விளம்பரம்-

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் காஜலின் முகம் தெரியவில்லை என்பதால் படத்தின் கெட்டப்பும் ரசிகசியமாக வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் காஜல் அகர்வாலின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படம் காஜல் அகர்வாலுக்கு திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் 2021 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement