தீபாவளிக்கும் சரக்கிற்கும் என்ன சம்மந்தம் – காஜல் பதிவிட்ட புகைப்படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
440
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார்.இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

கடந்த வருடம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.மேலும், சமீப காலமாக சோசியல் மீடியாவில் காஜல் அகர்வால் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்றும், அவர் வேறு ஒரு நபருடன் நெருங்கிய உறவில் இருக்கிறார் என்றும், விடுமுறை நாட்களில் தன் நண்பர்களுடன் ஊர் பயணங்கள் செல்கிறார் என்றும் அவரைப் பற்றி பல வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி கவுதம் கிச்லு என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார் காஜல். திருமணத்திற்கு பின்னர் தன் கணவருடன் அடிக்கடி சுற்றுல்லா சென்று வரும் காஜல் அடிக்கடி தனது கணவருடன் பல விதமான புகைபடங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தன் முதல் திருமண நாளில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் சரக்கு பாட்டிலுடன் தன் கணவருடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்ட காஜல, இந்த பண்டிகையை இந்த பானத்துடன் கொண்டாடுங்கள். இது சிறப்பான தீபாவளி கம்பெனி, பொறுப்புடன் குடியுங்கள் , இந்த பதிவு 25 வயதுக்கு மேற்பட்டோருக்கு தான் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

இதை பார்த்த ரசிகர்கள் பலர் குடிப்பதை விளம்பரப்படுத்த வேண்டாம். தீபாவளிக்கும் சரக்கிற்கும் என்ன சம்மந்தம் என்றும் காஜல் அகர்வாலை கழுவி ஊற்றி வருகின்றனர்.

Advertisement