பெற்றோருடன் சேர்ந்து கோவிலில் இப்படி ஒரு நேர்த்திக்கடன். மாப்பிளை உறுதியாகிவிட்டதா காஜலுக்கு.

0
5781
kajal-aggarwal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். தமிழில் பரத் நடித்த பழனி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான காஜல் அதன் பின்னர் விஜய் அஜித் சூர்யா என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடனும் கை கோர்த்து நடித்துவிட்டார். தமிழ் மட்டுமல்லாது தெலுகு சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் காஜல். மேலும், கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் கமிட் ஆகியிருந்தார் காஜல். மேலும், சமீபத்தில் இந்த படத்தில் நடிகை காஜல் வயதான தோற்றத்தில் மேக்கப் செய்து கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலானது.

Image

- Advertisement -

சமீபத்தில் இவரது நடிப்பில் தயாராகியுள்ள ‘பாரிஸ் பாரிஸ் ‘ படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அதில் நடிகை காஜல் அகர்வாலின் மார்பகத்தை அமுக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . சமீபத்தில் இவர் ஜெயம் ரவியுடன் நடித்துள்ள கோமாளி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பையும் பெற்றது.இந்த நிலையில் காஜலுக்கு திருமணம் உறுதியாகி விட்டதாகசெய்திகள் பரவி வருகிறது. தொழிலதிபர் ஒருவர் காஜலை மணக்க தயாராக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : அவசர பிரெஸ் மீட் வைத்த ஸ்ரீரெட்டி. உதயநிதி குறித்து இப்படி பேசி ஷாக்கொடுத்திருக்கார்.

அதை உறுதிபடுத்தும் வகையில் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் குடும்பத்துடன் வந்து வழிபாடு நடத்தியுள்ள நடிகை காஜல் அகர்வால். தலையில் பூக்கூடையை சுமந்து வந்து அவர் நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன. அந்த புகைப்படங்களில் காஜலுடன் அவரது தாயும் உள்ளார். மகளுக்கு திருமணம் உறுதியாகிவிட்ட சந்தோஷம் தாயின் முகத்தில் தெரிகிறது என்று இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Image

View image on Twitter

Image

ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற காஜல் அகர்வால் கூறியது,எங்கள் வீட்டில் என் கல்யாணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நானும் என் கல்யாணத்துக்கு ரெடியாக இருக்கிறேன் என்ற தகவல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எந்த நடிகரைப் போல மாப்பிள்ளை வேண்டுமென நினைக்கிறீர்கள் என்று காஜலிடம் கேட்டிருந்தார்கள். அதற்கு உடனே காஜல் அவர்கள் பிரபாஸ் என்று பெயர் கூறினார்.

மேலும், இந்த நடிகர் போல இருந்தால் நான் திருமணம் செய்துகொள்ள தயாராக உள்ளேன் என்றும் கூறியிருந்தார். மேலும் நடிகர் பிரபாஸ் அளித்த பேட்டி தொடர்ந்து நடிகை காஜல் அகர்வாலும் கூறிய திருமணம் நியூஸ் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆக போய்க்கொண்டு உள்ளது. அதோடு காஜல் தன்னுடைய வருங்கால கணவர் நடிகர் பிரபாஸ் போல் இருக்க வேண்டும் என்று கூறிய பதில் ரசிகர்களிடையே பயங்கர ஆச்சிரியத்தையும்,ஆவலையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், இவர்கள் இருவரும் திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

Advertisement