ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவியை தொடர்ந்து பிரபல மியூசியத்தில் இடம் பெரும் தென்னிந்திய நடிகையின் மெழுகு சிலை.

0
6829
wax-statue
- Advertisement -

சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் உலகில் பிரபலமான அரசியல் சின்னங்கள் போன்றவைகளின் உருவங்கள் மெழுகு சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. அதே போல உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் நடிகர்கள் அரசியல் தலைவர்கள் என்று பல்வேறு நபர்களின் உருவ சிலைகள் உருவாக்கப்பட்டு இங்கே அமைக்க பெற்றுள்ளது. சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து சென்ற வண்ணம் இருக்கிறார்கள்

-விளம்பரம்-

மேலும் தங்கள் வாழ்நாளில் நேரில் காணமுடியாத பல்வேறு பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் இங்கே இருப்பதால், தினமும் ஆர்வமாக அதனைக் காண பல்வேறு சுற்றுலா பயணிகளும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று வந்த வண்ணம் இருக்கிறார்கள்/ அதேபோல தங்களுக்கு பிடித்த பிரபலங்களின் மெழுகுச் சிலைக்கு அருகில் இருந்து புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்து கொள்கின்றனர். இங்கே அமைக்கப்படுகின்ற சிலைகள் மிகவும் தத்துரூபமாக அமைக்கப்படும். சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலை இங்கே அமைக்கப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : நித்யாந்தாவுடன் இருக்கும் சீமான். புகைப்படத்தின் பின்னனி என்ன ?

- Advertisement -

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் விஜய், அஜித்,சூர்யா என்று பல்வேறு நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிககைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் காஜல் அகர்வாலின் மெழுகு சிலையும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற உள்ளது. இதனை காஜல் அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்திலும் உறுதி செய்துள்ளார். மேலும், இவரது சிலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி இந்த சிலை திருந்து வைக்கப்பட இருக்கிறது.

இந்த ஏற்கனவே அருங்காட்சியகத்தில் நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, குயின் எலிசபெத் 2, பாராக் ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், ஜாக்கி சான், அமிதாப் பச்சன், கஜோல், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், மைகேல் ஜாக்சன், ஸ்பைடர் மேன், ஐயன் மேன் போன்ற பலரது உருவங்கள் உள்ளன. அதோடு நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காஜல் அகர்வாலின் மெழுகு சிலையும் இங்கே அமைக்கப்பட இருக்கிறது அவருக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

Advertisement