நித்யாந்தாவுடன் இருக்கும் சீமான். புகைப்படத்தின் பின்னனி என்ன ?

0
1417
Nithyanandha-seeman
- Advertisement -

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல அண்டை நாடுகளிலிருந்து வரும் முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் சட்டத்திற்கு எதிராக வட குடியுரிமை கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. மேலும், டெல்லி, அஸ்ஸாம், மும்பை என்று பல்வேறு பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். போராட்டத்தின பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதாக கூறி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் வன்முறையாக தடியடி செய்து தாக்கினார்கள். அதோடு பல மாணவர்களையும் கைதும் செய்தார்கள். தற்போது தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தொடங்கி உள்ளார்கள்.

-விளம்பரம்-
Nithyananda Sisiars who made the seaman

- Advertisement -

இதனால் நாடு முழுவதும் பூகம்பம் போல் இந்த போராட்டம் வெடித்து கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் நிலவிக் கொண்டிருக்கும் குடி உரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் சீமான் அவர்கள் போராட்டம் நடந்தி வந்தார். வழக்கம் போல் சீமான்-பேச்சு என்றாலே சமூக வலைத்தளங்களில் சர்ச்சையையும், சலசலப்பும் உண்டாகும். அப்போது சீமான் அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது குடியுரிமை பட்டியலில் இருந்து என் பெயர் நீக்கப்பட்டால் எனக்கு கவலை இல்லை. ஏன்னா, இருக்கவே இருக்கு நித்யானந்த சாமியின் “கைலாசம்”. நான் அங்கு சென்று விடுவேன் என்று கேலியாக பேசி போராட்டத்தை நடத்தினார்.

இதையும் பாருங்க : லாஸ்லியா கூட இல்லயாம். இவருடன் டேட்டிங் செல்ல தான் கவினுக்கு விருப்பமாம்.

இதனால் போராட்டத்தில் இருந்த தொண்டர்கள் அனைவரும் சிரித்தார்கள். நித்யானந்த சாமியின் “கைலாசம்” குறித்து கிண்டல் கேலி செய்து சிரித்த விஷயம் நித்தியானந்தா பக்தர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்லலாம். அதற்கு பதிலடி கொடுத்த நித்யானந்தா தரப்பில் இருந்து சீமானுக்கு பாஸ்போர்ட் தயார் செய்து தருகிறோம் என்று கூட கிண்டல் அளித்திருந்தார்கள். இதனை தொடர்ந்து நித்தியானந்தா தரப்பில் இருந்து பதிலடி கொடுத்து வருகிறார்கள். அவர்கள் கூறியது, ஸ்ரீ கைலாசம் ஒன்றும் திறந்த மடம் அல்ல. மேலும், திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சி அம்மன் பாதம் வணங்கினால் தான் சீமானுக்கு ஸ்ரீ கைலாசத்தில் குடியுரிமை வழங்க வழங்கப்படும் என்றும் கூறினார்கள்.

-விளம்பரம்-

இதனால் சீமான் கட்சி தொண்டர்களும், ஆதரவாளர்களும் கடுமையாக இது குறித்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். அது மட்டுமில்லாமல் நித்தியானந்தா சீடர்கள் ஒரு படி மேலே போய் “உனக்கு தனிநாடு கைலாசம் இருக்கு, சீமானுக்கு ஒரு கவுன்சிலர் கூட இல்ல”, “உனக்கு மூளை வளர்ச்சி இருக்கு நீ ஞானி, அவனுக்கு என்ன இருக்குன்னு தெரியல?? என டுவிட்டரில் பதிலடி கொடுத்து வந்தார்கள். அடுத்து இதையெல்லாம் தாண்டி ஒரு வேலையை பார்த்து உள்ளார்கள் நித்தியானந்தா சீடர்கள். அது என்னவென்றால் சீமானின் புகைப்படத்தை சாமியார் புகைப்படத்துடன் கிராபிக்ஸ் செய்து அவர்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு நித்யானந்தரின் சீடர் சீமான் என்று பரப்பி வருகின்றனர். தற்போது இந்த செயல் சமூக வலைத் தளங்களில் பயங்கர சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதனால் சீமன் கட்சி தொண்டர்கள் அனைவரும் கடும் கோபத்தில் உள்ளார்கள்.

Advertisement