ஹனி மூன் பிளானை கூட தள்ளி வைத்து நடித்து கொடுத்த காஜல் – குழந்தை பிறந்தவுடன் அவரின் காட்சிகளை நீக்கிய படக்குழு. இதான் காரணமாம்.

0
402
- Advertisement -

சிரஞ்சீவி படத்தில் காஜல் நடித்த காட்சிகள் நீக்கப்பட்ட காரணம் குறித்து படத்தின் இயக்குனர் விளக்கமளித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி தொழிலதிபர் கெளதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கூட காஜல் அகர்வால் தான் கமிட் ஆன படங்களில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

திருமணத்திற்கு பின்னர் கூட காஜல் அகர்வால் தான் கமிட் ஆன படங்களில் நடித்து வந்தார். மேலும், தன் கணவர் தனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார் என்றும் அவர் தான் நடிப்பதற்கு எந்த தடையும் சொல்லவில்லை. என் கணவர் சினிமாவில் இருந்து விலக சொன்னால் கூட நான் விலகிவிடுவேன் என்றும் கூறி இருந்தார் காஜல். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் காஜலுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

- Advertisement -

சிரஞ்சீவியின் ஆச்சார்யா :

இப்படி ஒரு நிலையில் நடிகை காஜல் திருமணத்திற்கு பின்னர் ஆச்சார்யா படத்தில் நடித்து வந்தார். தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 152ஆவது படமான ‘ஆச்சார்யா’ படத்தை கொரட்லா சிவா இயக்குகிறார். ராம்சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்ட்டும் இணைந்து பெரும் பொருள்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

காஜல் காட்சிகள் நீக்கம் :

இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது. அதேவேளையில், காஜல் அகர்வால் திருமணம் முடிந்து கருவுற்றிருந்த நிலையில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில், படத்தின் ப்ரோமோ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது இதில் காஜல் அகர்வால் கலந்து கொள்ளவில்லை. மேலும், இந்த படத்தின் காஜலின் காட்சிகளை நீக்கிவிட்டதாக படக்குழு தெரிவித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இயக்குனர் கொடுத்த விளக்கம் :

இதுகுறித்து விளக்கமளித்த படத்தின் இயக்குனர் ‘ஆரம்பத்தில், காஜலின் பாத்திரம் ஜாலியான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டது, ஆனால், படத்தை பார்த்த பிறகு, ஒரு நட்சத்திர நடிகையை இவ்வளவு சிறிய கதாபாத்திரத்தில் வைப்பது சரியல்ல என்று நினைத்தேன். அவர் என் கவலையைப் புரிந்துகொண்டார், அதனால் அதை எதார்த்தமான வழியில் எடுத்துக் கொண்டார். இருப்பினும் அவர் ‘லாஹே லாஹே’ பாடலில் காணப்படுவார்.

படத்திற்காக ஹனிமூனையே தள்ளி வைத்த காஜல் :

திருமணம் முடிந்த உடனே புதுமணத்தம்பதிகள் ஹனிமூன் செல்வது வழக்கம், ஆனால் நடிகை காஜல் அகர்வால் தனது ஹனிமூனை தள்ளிவைத்துவிட்டாராம். ‘ஆச்சார்யா’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதால் அவர் இந்த முடிவைஎடுத்தார். ‘ஆச்சார்யா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஹனிமூன் செல்ல அவர்திட்டமிட்டார். இப்படி ஒரு நிலையில் அவரின் காட்சிகள் நீக்கப்பட்டு இருப்பது பெருத்த ஏமாற்றமே.

Advertisement