மும்தாஜ் கரெக்ட்..! ரித்விகாவுக்கு எதிராக பேசும் பிக் பாஸ்-1 போட்டியாளர்.! இது உண்மையா..?

0
358
Mumtaj

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வார நாமினேஷனில் இருந்த மும்தாஜ், ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலக்ஷ்மி ஆகியோரில் மும்தாஜ் வெளியேற்றபட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக அனைத்து போட்டியாளர்களுக்கு அட்வைஸ் கூறிவிட்டு சென்றார்.

அதே போல வீட்டைவிட்டு செல்வதற்கு முன்பாக ரித்விகாவிடம் பேசுகையில், அனைவரும் ஒழுங்கா விளையாடுங்கள் ஒருவரைகோருவர் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். தமிழ் பொண்ணு, இந்தி பொண்ணு போன்ற வேறுபாடுகள் வேண்டாம் ரித்விகா. உங்களிடம் இருந்து நான் அதனை எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறார். அதற்கு ரித்விகா நான் அப்படி பேசவே இல்லை நீங்கள் வெளியே போய் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.

இதே விடயத்தை கமல் கேட்ட போதும் மறுப்பு தெரிவித்த ரித்விகா, நான் தமிழ் பெண்கள் மட்டும் தான் வர வேண்டும் என்று கூறவில்லை. தமிழ் பெண்களும் பைனலில் இருக்க வேண்டும் என்று தான் கூறியிருந்தேன் என்று கமலிடம் தெரிவித்திருந்தார். ஆனால், ரித்விகா உண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டத்திற்கு தமிழ் பெண்கள் கண்டிப்பாக வர வேண்டும் என்று கூறியுள்ளது தற்போது குறும்படமாகவே வெளியாகியுள்ளது.

Mumtaj

kajal-pasupathi

சமீபத்தில் மும்தாஜ், பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்பாக ரித்விகாவிடம் கேட்டதை குறிப்பிட்டு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான கஜால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், முமோ சொன்னது சரி தான், ரித்விகா குறும்படம் போட்டுட்டாங்க என்று பதிவிட்டு ரித்விகா, பாலாஜி, ரித்விகா பேசிய ஒரு சிறு குறும் படத்தையும் ஷேர் செய்துள்ளார்.