உனக்கு சின்ன வயசு தான், உனக்கு ஒரு துணை வேண்டும்னு சொன்னேன் – மீனா சொன்ன பதிலால் அப்படியே வாய முடிகிட்டேன். கலா மாஸ்டர் சொன்ன விஷயம்.

0
1128
- Advertisement -

மீனாவின் மறுமணம் குறித்து கலா மாஸ்டர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இவர் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுலகில்நடித்து வருகிறார். அதன் பின் கதாநாயகியாக நடித்து வந்தார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும், இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு,அஜித், உள்ளிட்ட பல பிரபலங்களுடன் பிசியாக நடித்து இருக்கிறார். தமிழில் சிறிய இடைவெளி எடுத்து கொண்ட மீனா கடந்த ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மீனா அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது.

- Advertisement -

மீனா குடும்பம்:

இதற்கு இடையில் மீனா அவர்கள் வித்யாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். நைனிகா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூரை சேர்ந்தவர். வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை இருந்திருக்கிறது. இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

மீனாவின் கணவர் மரணம்:

இதற்கு காரணம் புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்ததனால் இந்த நோய் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த பாதிப்பு இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மீனாவின் கணவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. பின் ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்து சிகிச்சை அளித்து வந்தார்கள். இருந்தும் சிகிச்சை பலன் இல்லாமல் சமீபத்தில் தான் வித்யாசாகர் இறந்து விட்டார். வித்யாசாகரின் இறப்பிற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள்.

மீண்டும் படங்களில் மீனா:

மேலும், மீனாவிற்கு ஆறுதலாக அவளுடைய தோழிகள் தான் இருக்கின்றார்கள். சமீபத்தில்கூட மீனா தன்னுடைய தோழிகளான சங்கவி, ரம்பா, சங்கீதா உள்ளிட்டோருடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் வெளியாகி இருந்தது. அதேபோல் மீனாவின் 46வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி இருந்தார்கள். அதோடு எப்போது கலா மாஸ்டர் மீனாவிற்கு உறுதுணையாக இருந்து இருக்கிறார். தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் மீனாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கலா மாஸ்டர் மீனாவின் மறுமணம் குறித்து பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

கலா மாஸ்டர் பேட்டி:

அதில் அவர், நானும் மீனாவும் 25 வருடமாக நண்பர்கள். அதுவும் சாதாரண நட்பு கிடையாது குடும்ப நண்பர்கள். அவருடைய கணவருக்கு உடல்நிலை சரியில்லாத போது மூன்று மாதம் நான் அவளுடன் தான் இருந்தேன். அவளைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் சினிமாவுக்கும் நிஜத்திற்கும் சம்பந்தமே கிடையாது. மீனா ஒரு மென்மையான மனம் கொண்டவள். மீனாவின் கணவர் இறந்த போது அவளிடம் நான், உனக்கு வாழ்க்கையில் ஒரு துணை வேண்டும். உனக்கு சின்ன வயது தான் என்று சொன்னேன். உடனே மீனா, என்னை திட்டி உங்கள் வேலையை பார்த்துட்டு போங்க, வேண்டாம் அக்கா. எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் என்று சொன்னார். உடனே நான் வாயை மூடி கொண்டேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement