என்னை பொய் சொல்லி ஏமாற்றி விட்டாள் மீனா என்று கலா மாஸ்டரின் உருக்கமான பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடன கலைஞராக திகழ்பவர் கலா மாஸ்டர். இவர் மானாட மயிலாட என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியை பல பாகங்களாக கொண்டு சென்றார்கள். அதோடு இவர்களுடைய குடும்பமே நடன குடும்பம் என்ற சொல்லலாம்.
இவருடைய மைத்துனர் மாஸ்டர் ரகுராம் மூலம் தான் இவருக்கு திரைப்படத்துறையில் வாய்ப்பு கிடைத்தது. பின் இவர் தன்னுடைய 12 வயதிலிருந்து நடன உதவியாளராக பணியாற்றி வந்தார். 1989 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான புது புது அர்த்தங்கள் என்ற படத்தின் மூலம் தான் இவர் நடன இயக்குனராக அறிமுகமானார். அப்படியே இவர் 30 வருடத்திற்கு மேலாக இந்திய சினிமாவில் முக்கிய நடன இயக்குனராக பங்கு வகித்து வருகிறார். இவருடைய சகோதரி பிருந்தாவும் பிரபல நடன இயக்குனர் ஆவார்.
கலா மாஸ்டர் திரைப்பயணம்:
மேலும், கலா மாஸ்டர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஒரியா, பெங்காலி, ஆங்கிலம், இத்தாலியன் ஆகிய பல மொழிகளில் 4000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். தற்போது கலா மாஸ்டர் நடிகையாக சினிமா உலகில் அறிமுகமாகி இருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் காத்துவாக்குல இரண்டு காதல். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.
கலா மாஸ்டர் நடித்த படம்:
இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் மூலம் நடன இயக்குனர் கலா மாஸ்டர் நடிகையாக அறிமுகமாகிறார். இப்படத்தில் அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, கலா மாஸ்டர் நடிகை மீனாவின் நெருங்கிய தோழி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சில மாதங்களுக்கு முன்பு நடிகை மீனாவின் கணவர் நுரையீரல் பிரச்சனை காரணமாக காலமானார்.
கலா மாஸ்டர்-மீனா நட்பு:
அப்போது மீனாவிற்கு உறுதுணையாக இருந்து எல்லா சடங்குகளையும் பார்த்துக் கொண்டார் கலா மாஸ்டர்.
இதற்கு ரசிகர்கள் பலருமே கலா மாஸ்டரை பாராட்டி இருந்தார்கள். இந்த நிலையில் மீனா பொய் சொல்லிவிட்டாள் என்று கலா மாஸ்டர் கலங்கிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. அதாவது, தற்போது கலா மாஸ்டர் தன்னுடைய திருமண நாள் விழாவுக்கு மீனாவை அழைத்திருக்கிறார்.
கலா மாஸ்டர் பதிவு:
அப்போது மீனா, நான் வெளியே செல்ல இருப்பதால் நான் ஊரில் இருக்க மாட்டேன். என்னால் வர முடியாது என்று கூறியிருக்கிறார். இதனால் கலா மாஸ்டர் அமைதியாகி விட்டார். பின் யாருக்கும் தெரியாமல் சர்ப்ரைஸ் ஆக மீனா, கலா மாஸ்டர் வீட்டிற்கு சென்று இருக்கிறார். உடனே கலா மாஸ்டர் சந்தோஷத்திலும் மகிழ்ச்சியிலும் பூரித்து போயிருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்களை தான் கலா மாஸ்டர் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.