இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடன கலைஞராக திகழ்பவர்கள் கலா மாஸ்டர். இவர் மானாட மயிலாட என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியை பல பாகங்களாக கொண்டு சென்றார்கள். மேலும், இவர்களுடைய குடும்பமே நடன குடும்பம் என்ற சொல்லலாம். இவருடைய மைத்துனர் மாஸ்டர் ரகுராம் மூலம் தான் இவருக்கு திரைப்படத்துறையில் வாய்ப்பு கிடைத்தது. பின் தன்னுடைய 12 வயதிலிருந்து இவர் நடன உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
நடிகையான கலா மாஸ்டர் :
1989 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான புது புது அர்த்தங்கள் என்ற படத்தின் மூலம் தான் இவர் நடன இயக்குனராக அறிமுகமானார். பின் 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் முக்கிய நடன இயக்குனராக பங்கு வகித்து வருகிறார். இவருடைய சகோதரி பிருந்தாவும் பிரபல நடன இயக்குனர் ஆவார். தற்போது இவர் ‘ஹே சினாமிகா’ என்ற படம் மூலம் இயக்குனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஒரியா, பெங்காலி, ஆங்கிலம், இத்தாலியன் ஆகிய பல மொழிகளில் 4000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் கலா மாஸ்டர் நடிகையாக சினிமா உலகில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் காத்துவாக்குல இரண்டு காதல். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.
காத்துவாக்குல ரெண்டு காதல் :
மேலும், விக்னேஷ் சிவன் மற்றும் லலித்குமார் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி ராம்போ எனும் கதாபாத்திரத்திலும், சமந்தா காதீஜா எனும் கதாபாத்திரத்திலும், நயன்தாரா கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கலா மாஸ்டரின் கதாபாத்திரம் :
மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது டப்பிங், எடிட்டிங் என்று இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த படத்தின் மூலம் நடன இயக்குனர் கலா மாஸ்டர் நடிகையாக அறிமுகமாகிறார். இப்படத்தில் அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
20 நாள் படப்பிடிப்பில் கலா மாஸ்டர் :
இதற்காக இவர் 20 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இத்தனை வருடங்களாக திரைக்குப் பின்னால் ஜொலித்துக் கொண்டிருந்த கலா மாஸ்டர் முதல் முறையாக திரைக்கு முன் தோன்ற இருக்கிறார். இதனால் இவரை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இனிமேல் கலா மாஸ்டர் சும்மா கிழி கிழி தான் என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.