தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் மற்றும் அஜித் இரு துருவங்களாக இருந்து வருகின்றனர். பிரபலங்கள் பங்குபெறும் பேட்டிகளில் இவர்களை பற்றிய கேள்விகள் இடம்பெறாமல் இருக்காது என்றே கூறலாம். அந்த வகையில் பிரபல திரைப்பட நடன இயக்குனர் கலா பேட்டி ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது அவரிடம் விஜய் மற்றும் அஜித் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அப்போது அஜித் பற்றி பேசுகையில், அஜித்தை “அமராவதி” படத்தின் போது சந்தித்தேன். அதன் பின்னர் நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்தை சந்தித்த போது பல விடயங்களை பேசினோம். அவருக்கு உண்மையில் பிறரை காக்க பிடிக்க தெரியாது.
அதே போல அவர் செய்யும் பல உதவிகளை அவர் வெளியில் காண்பித்துக்கொள்ளவது இல்லை. அவரிடம் நான் கேட்கும் ஒரு விஷயம் தயவு செய்து வெளியே வாங்க அஜித். எல்லா விஷயத்திலும் என்று கூறியிருந்தார்.
மேலும், விஜய் பற்றி கூறுகையில், இந்த புனையும் பால் குடிக்குமா என்பது போல தான் அவர் இருப்பார். அவர் நடனமாடினால் டான்ஸர்களே அசந்து விடுவார்கள். சமீப காலமாக அவர் செய்த உதவிகள் யாருக்கும் தெரியாத வகையில் மிகவும் அமைதியாக இரவு நேரங்களில் சென்று உதவி செய்துள்ளார். அவர், அஜித்தை போன்று மிகவும் சிறப்பான மனிதர். விஜயிடம் கேட்க விரும்பும் ஒரே கேள்வி என்னவென்றால், நீங்கள் ஒரு நல்ல அவார்ட் வாங்க கூடிய படத்தில் நடியுங்கள் விஜய் , உங்களுக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும், என்று கலா மாஸ்டர் கூறியிருக்கிறார்.