இதுவரை நீங்கள் பாக்காத மறைந்த கலைஞர் கருணாநிதியின் தாய், தந்தை இவர்கள் தான் .! புகைப்படம் இதோ

0
355
kalaingar

திமுக கட்சி தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு. கருணாநிதி அவர்கள் இன்று (ஆக்ஸ்ட் 7) உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. தமிழகமே சோகமுடன் இருக்கும் இந்த சூழலில் கலைஞர் அவர்களின் இழப்பிற்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

kalainjar

கடந்த ஒரு வார காலமாக உடல்நல குறைபாட்டால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களாக கலைஞர் அவர்களின் உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட்டு வந்த நிலையில் இன்று அவரது உடல்நிலை மோசமானதால் உயிரிழந்துவிட்டார்.

கலைஞர் அவர்களை பற்றி நாம் பல விடயங்களை அறிவோம். ஆனால், அவரது பெற்றோரின் புகைப்படத்தை நம்மில் பல பேர் கண்டிருக்க வாய்ப்பில்லை.1924 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை கிராமத்தில் முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாய் பிறந்தார் கலைஞர் அவர்கள். கலை மீதும் தமிழ் மீதும் அதிக பற்று கொண்ட கலைஞரின் இழப்பு தமிழகத்திற்கு உண்மையில் ஒரு மறக்கமுடியாத கருப்பு தினம் தான்.

Karunanidhi-parents

தமிழகமே கலைஞர் அவர்களின் இழப்பினால் சோகத்தில் ஆழ்துள்ள நிலையில் தற்போது கலைஞரின் பெற்றோரின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தின் ஒப்பற்ற தலைவரை பெற்றெடுத்த கலைஞரின் பெற்றோர் புகைப்படம் இதோ.