முத்தமிழ் அறிஞர், திமுக கட்சியின் தலைவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் இறப்பு செய்தி தமிழகத்தையே உலுக்கி உள்ளது. நேற்று(ஆகஸ்ட் 7)மாலை 6.10 மணி அளவில் கலைஞர் அவர்கள் உயிர் பிரிந்தார் என்பதை அறிந்து பலரும் அதிர்ந்து போகினார்.
நேற்று இரவு சென்னை கோபாலபுறத்தில் உள்ள ராஜாஜி மஹாலிற்கு கலைஞர் அவர்களின் உடல் கொண்டுசெல்லப்பட்டது . பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கும்,, திரைத்துறை கலைஞர்களும் கலைஞர் அவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியிடன் இன்று(ஆகஸ்ட் 8)அதிகாலையே சென்று கலைஞர் அவர்களின் உடலுக்கு இறுதி மரியாதையை செய்துள்ளனர். கலைஞர் அவர்களின் இறப்பு செய்தி கேட்டு நேற்று ட்விட்டரில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவவித்திருந்தார் நடிகர் அஜித்.
நடிகை அஜித் மற்றும் ஷாலினி அவர்கள் கலைஞரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்.