‘கலைவாணர் பேரனா இருந்தும் எனக்கு இந்த நிலைமை’ – பல படங்களில் நடித்த நடிகரின் பரிதாப நிலை.

0
667
kalaivanar
- Advertisement -

பல நடிகர்கள் சினிமாவில் நடிக்க தொடங்கிய குறுகிய காலத்திலேயே திரையில் பிரபலமாகி விடுகின்றனர். இன்னும் சில பேர் நன்றாக நடித்தும் அதற்கு மேல் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகின்றனர் அந்தவகையில் நடிகர் மற்றும் இயக்குனரான ஹரிஸ் அத்தித்யாவை சொல்லலாம். கலைவாணரின் பேரனாக இருந்தும் திரைப்படங்களில் சில வாய்ப்புகள் மட்டுமே கிடைத்து தற்போது சன் டிவியில் சீரியல்களை இயக்கிவருகிறார்.

-விளம்பரம்-

“கும்மாளம்” என்ற திரைப்படட்தின் மூலம் அறிமுகமான ஹரிஸ் அத்தித்யா அதற்க்கு பின்னர் திருடாதிருடி, ரகசியம், மலையைக்கூட போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது சீரியல்களில் நடித்தும் இயக்கியும் வரும் ஹரிஸ் அத்தித்யா சுப்ரமணிபுரம், யாரடி நீ மோகினி, கல்யாண பரிசு, பிரியமானவள் போன்ற பல பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றுகிறார். மேலும் மெட்டி ஒலி சாந்தி, நரசிம்ம ராஜு, ஈஸ்வர் ரகுநாதன், குகன் சண்முகம், மோனா பெத்ரா மற்றும் பல பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் பணியாற்றுகிறார்.

- Advertisement -

இந்நிலையில்தான் பிரபல பத்திரிக்கை சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அந்த பேட்டியில் தனக்கு கலைவாணர் தத்தாவாக இருந்தலாலும் நான் என்னுடைய விருப்பத்தில் தான் சினிமாவில் நடிக்க தொடங்கினேன். நான் மருத்துவ படிப்பை முடித்த பின்னர் வேலையை செய்து கொண்டே சினிமாவில் வாய்ப்புக்காக தேடினேன். பின்னர் பாலா இயங்கிவந்த நந்தா திரைப்படத்தில் மாணவர்களை தேவைப்பட்டதால் ஆடிஷன் நடந்தது நானும் அதில் கலந்து கொண்டேன். அப்போது நான் எப்படியாவது இயக்குனர் பாலாவை பார்த்து விட வேண்டும் என்று கேமெரா பக்கத்திலேயே இருந்தேன். இதனை கவனித்து கொண்டே இருந்தார் இயக்குனர் பாலா.

பின்னர் நந்தா திரைப்படத்தில் ஒரு கட்சியில் எலக்க்ஷன் நடைபெறும் அதற்காக பல ஏற்பாடுகளை செய்திருந்தனர் அப்போது குட்டத்தில் இருந்த என்னை அழைத்தார் இயக்குனர் பாலா. இதனை பார்த்த கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோறும் மலைத்து பார்த்தார்கள் ஏனெற்றால் படத்தின் இயக்குனரே கூப்பிட்டுள்ளார் என்று. சரி என்றும் நானும் சென்று கேட்டதற்கு சுகுமார் என்ற புகைப்பட கலைஞரை அழைத்து சில புகைப்படங்களை எடுக்க சொன்னார். மறுநாள் நான் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தேன். அந்த திரைப்படம் முடிந்த பின்னர் நான்கு கதாநாயகன்கள் நடிக்கும் “கும்மாளம்” என்ற திரைப்படத்தில் நடித்தேன்.

-விளம்பரம்-

இதற்க்கு பிறகு தனுஷ் நடித்திருந்த திருட திருடி படத்தில் கருணாஸ் நடித்திருந்த கதாபாத்திரத்தில் நான் நடிக வேண்டியாது. ஆனால் எனக்கு அந்த திரைப்படத்தினால் சில காரங்களினால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின்னர் விஷால் நடித்திருந்த மலைக்கோட்டை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தேன் அப்போதுதான் என்னுடைய மனைவி கர்ப்பமாக இருந்தார். பின்னர் திரைப்படத்தில் நடித்துக்கொண்டே சீரியலிலும் நடிக்க தொடங்கினேன் முதல் சீரியலிலேயே மொட்டை போட்டு நடித்திருந்தேன் அந்த சீரியல் எனக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. அப்போது என்னுடைய நடிப்பிற்கு பல பிரபலங்கள் பாராட்டியிருந்தனர்.

இந்த சீரியல் முடிந்த பிறகு எனக்கு சினிமாவில் ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. அந்த நேரம் என்னடா நாம் நன்றாகத்தான் நடித்தோம், யாரிடமும் சண்டையும் கிடையாது ஆனால் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நானும் பல பேரிடம் வாய்ப்பு தேடி அழைத்தேன் பின்னர் அப்படியே சில சீரியல்களில் நடித்து வாழ்கை சென்றது. அதன் பின்னர் இயக்குனர் பாலசந்திரன் கம்பெனியில் “தேன்மொழியால்” என்ற சிரியலில் நடித்திருந்தேன். அந்த சீரியல் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இதனை பார்த்த பாலச்சந்திரன் அவர்கள் என்னை அழைத்து பாராட்டி நெத்தியில் முத்தமிட்டார் அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஓன்று.

பின்னர் இயக்குனர் நாக இயக்கவிருந்த திரைப்படத்தை எடுக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் ஜெயா டிவியில் சுப்பிரமணி சீரியலில் நடித்திருந்தேன் அப்போது எனக்கு ஒரே சேனலில் இரண்டு சீரியலுக்கு இயக்குனராக வாய்ப்பு கிடைத்து. அதற்கு பிறகு “சுபராமணியபுரம்” என்ற திரைப்படத்தை எடுத்திருந்தோம் அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பிறகு அங்கினி நட்சத்திரம் 2 மற்றும் கல்யாண பரிசு 2 போன்ற சீரியல்களில் இயக்கினேன். பின்னர் “திருமகள்” சீரியலை இயக்க வாய்ப்பு கிடைத்து ஆனால் அங்கு சில காரணங்களினால் அந்த சீரியலை விட்டு வந்துவிட்டேன். இந்த நிகழ்வுக்கு பின்னர் சன்டிவியில் “தாலாட்டு” என்ற சீரியலை இயக்கிவருகிறேன் என்று தன்னுடைய திரைவாழ்க்கையை பற்றி பல விஷியங்களை பகிந்துகொண்டார் இயக்குனர் மற்றும் நடிகரான ஹரிஸ் அத்தித்யா.

Advertisement