பாடி பில்டிங் செய்து அரசு வேலை வாங்கிவிடலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் – கலகலப்பு காமெடி நடிகரின் பேட்டி.

0
1056
krishna
- Advertisement -

சினிமாவில் திரைக்கு முன் நாம் பார்ப்பவர்களை தான் ஹீரோ என்போம். ஆனால் திரைக்குப் பின் வேலை செய்யும் ரியல் ஹீரோக்கள் பற்றி அறியாமல் இருக்கின்றோம். அந்த வகையில் இன்று சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் சண்டை பயிற்சிகளில் இருந்து இப்பொழுது காமெடி வரை கலக்கும் ஒருவரே பற்றி பார்க்க இருக்கிறோம்.இவருடைய ஒரு காமெடி சீன் சொன்னாலே உங்களுக்கு ஞாபகம் வந்துவிடும் கலகலப்பு படத்தில் தண்ணிக்குள் சென்ற அஞ்சலியை காப்பாற்ற சந்தானமும் அவருடன் இருந்தவர்களும் தண்ணிக்குள் இறங்கி தேடுவார்கள் அஞ்சலியை காப்பாற்றுவதாக நினைத்து சந்தானத்தின்
உள் பனியினை பிடித்து தூக்கி விடுவார், சந்தானம் நீ அம்மாவை இங்கு பிடித்து தான் தூக்கு வாயா? நீ தூக்கவே வேண்டாம் போடா என்று சொல்லுவார். அந்த காமெடி சீனில் நம்மளை எல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் தான் பைட்டர் கிருஷ்ணன் அவரைப் பற்றி இன்னும் சில சுவாரசியமான தகவல்களை நம்மிடையே பகிர்ந்து உள்ளார் பார்க்கலாம்.

-விளம்பரம்-

சினமா வாய்ப்பு :-

1998 ன் போது படைப்பாளி என்ற சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தேன். அப்போது நான் பாக்சிங், கராத்தே, பாடி பில்டிங் செய்து கொண்டிருந்தேன் . அப்பொழுது ஆக்ஸ் பாபு என்ற மாஸ்டர் என்னிடம் வந்து இந்தி படம் சூட்டிங் ஒன்று செல்கிறோம் வருகிறீர்களா என்று கேட்டார். அதற்காக தான் சங்கத்தில் உறுப்பினர் கார்டு வாங்க வந்தேன் என்று சொன்னேன். உடனடியாக என்னையும் சேர்த்துக் கொண்டு தவுடு என்ற இந்தி பட சூட்டிங்காக அழைத்து சென்று விட்டார்கள். அங்கு போய் உருண்டு புரண்டு சண்டை காட்சிகளில் நன்றாக அடித்து அவருக்கு மிகவும் பிடித்து பிடித்து விட்டது அதன் பிறகு அங்கிருந்து அப்படியே ஹைதராபாத் ஒரு பட சூட்டிங் கூட்டி சென்றார்கள் அது முடிந்தவுடன் ஒரிசாவில் ஒரு பெங்காலி பட சூட்டிங் போட்டி சென்றார்கள் அதை முடித்துவிட்டு சென்னை வந்தபோது பம்பல் ரவி என்கிற மாஸ்டர் என் ஆர் சி ராசாவே வா சிவாஜி சார் முரளி இணைந்து நடிக்கும் படத்தில் மாந்தோப்பில் சாராயக்கடை சட்டத்தில் நானும் முரளியும் சண்டை போடுவது போன்ற ஒரு காட்சி இருக்கும் அந்த படத்தில் நடித்த உடன் அதற்கு பின்பு நான் அப்படியே பிஸியாகி விட்டேன் சினிமாவில் தொடர்ந்து அடிக்க ஆரம்பித்து விட்டேன்

- Advertisement -

காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தேன் :-

நகரம் படத்தினல் ஃபைட்டர் ஆக வந்தேன் பின்பு தலைநகரம் 2 படத்தின் போது சுந்தர் சி யின் கூட பயனிப்பது போன்று காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தேன். நான் பேசுவது செய்வது இது போன்ற விஷயங்கள் சுந்தர்.சி க்கு மிகவும் பிடித்து போக சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு படத்தின் காட்சிகளில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். அதில் சந்தனமுடன் நானும் தளபதி தினேஷ் போன்றவர்கள் சந்தானம் உடன் இருப்பவர்கள் போன்ற காட்சிகளின் நடிப்போம்.இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் எங்கள் கேரக்டர்களுக்கு பெயர் வைக்கும் போது சுந்தர் சி சந்தானமிடம் இவர்கள் மூவருக்கும் பெயர் வைக்க வேண்டும் என்ன பெயர் வைக்க வைக்கலாம் சந்தானம் என்று கேட்டார். அப்போது தளபதி தினேஷ் நெஞ்சு உயர்த்தி கொண்டு இருந்ததை பார்த்துவிட்டு திமிங்கலம் என்ற பெயரை வைத்தார். நான் முடி நிறையாக வைத்துக் கொண்டு இருந்ததால் பேய் என்று பெயர் வைத்தார். என்னுடன் இருந்தவர் அவர் தலைசொரிந்து கொண்டே இருப்பார் அவருக்கு மண்டகசாயம் என பெயர் சூட்டினார். நான் வெளியில் எங்கும் செல்லும்போது வாங்க பேய் எப்படி இருக்கீங்க பேய் என்றுதான் அழைப்பார்கள். அவர்கள் அப்படி கூப்பிடும் பொழுது அது ஒரு மகிழ்ச்சியாக இருக்கும்.

சந்தானம் உடன் இருந்த அனுபவம் :-

சந்தானத்தின் வோன் ப்ரொடக்ஷனில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.அப்போது அதில் வரும் ஒரு காட்சியில் சந்தானம் கயிறை அவரே அறுத்துவிட்டு ஊஞ்சலில் அடிபட்டு கீழே விழுவது போன்ற காட்சி அதில் சந்தானத்தை தூக்கிக்கொண்டு கட்டிலில் போட்டுவிட்டு நான் குனிந்து எப்படி இருக்கின்றது என்று கேட்பேன் சந்தானம் உடனே நீர்யானை தண்ணீர் குடிப்பது போல இருக்கு என்று கூறுவார் அந்த அந்த சீன் எடுக்கும் போது நான் குனிந்து எப்படி இருக்கு என்று கேட்கும் போது அவர் எப்படி உடனே யோசிக்கிறார் என்று பாருங்கள். அவர் அடிக்கும் கவுண்டரை வேற யாரும் சிந்திக்க கூட முடியாது அந்த அளவுக்கு காமெடியாக பேசுவார். கலகலப்பு படத்தில் கூட அம்மாவை புடிச்சிட்டேன் அம்மாவை புடிச்சுட்டேன் அந்த காட்சி இயற்கையாகவே வந்தது தோல்பட்டை அடியில் கையை விட்டு சந்தானத்தை தூக்க வேண்டும் நான் பிடிமானத்திற்காக அவரது உள் பனியினை பிடித்து தூக்கி தூக்கினேன் இதுபோன்று சந்தானத்துடன் நடிக்கும் போது இயற்கையாகவே பல காட்சிகள் அமையும் என்றார்.

-விளம்பரம்-

சினிமாவுக்கு முன் என் ஆசை :-

நான் முதன்முதலாக பாடி பில்டிங் கராத்தே பாக்சிங் என சென்றதற்கு காரணம் என்னவென்றால். இதில் ஒரு ப்ரொபெஷனல் ஆக சென்று விட்டு ஸ்போர்ட்ஸ் கோட்டாவின் மூலம் அரசாங்க வேலை எது ஏதேனும் ரயில்வே இது போன்ற வேலைகளில் சேரலாம் என்ற ஒரு குறிக்கோளோடு தான் இருந்தேன். என்னுடன் பாடி பில்டிங் செய்து கொண்டிருந்த என் தம்பி குசேலன் என்பவன் ரயிலில் டிடிஆராக வேலை செய்கிறான் இன்னும் நான்கு வருடத்தில் ரிட்டேயர் ஆக போகிறார். அந்த மாதிரி தான் யோசித்து நான் இதற்குள் வந்தேன் அதற்கு அப்புறம் சினிமாவில் நடிக்க வந்தவுடன் சினிமாவில் முழுமூச்சாக இறங்கி விட்டேன் இப்பொழுது சினிமா தான் எனக்கு எல்லாமே என்று சந்தோஷமாக கூறுகிறார்.

ஹூரோக்களுடன் உன்டான அனுபவங்கள் :-

நான் உடன் பணியாற்றிய ஹீரோக்களின் அனுபவம் எப்படி இருக்கும் என்றால் முதலில் விஜயகாந்த் எடுத்துக் கொண்டால் அவர் எல்லாம் எந்தவித சண்டைக் காட்சிகள் இருந்தாலும் டூப் போட மாட்டார் இயற்கையாக அவரே நடிப்பார் அந்த அளவுக்கு வெறித்தனமாக நடிப்பு அவரிடம் இருக்கும். அதற்கடுத்தார் போல் சரத்குமார் சார் எடுத்துக் கொண்டால் அவர் கூட கம்பீரம் என்ற படம் பண்ணிய போது நாங்கள் சண்டைக் காட்சிகளில் ரோப்புகளில் தொங்கும் போது ஒரு ஜான் வயிற்றுக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறான் என்று எம்.ஜி.ஆரின் பாடல்களை பாடி காட்டுவார். அதை படத்தின் போது எனக்கு சிறிய அடிபட்டு மூக்கில் ஆபரேஷன் செய்தனே். அப்பொழுது என்னை ஆஸ்பத்திரியில் நேரடியாக வந்து சந்தித்தவர் சரத்குமார். அதற்கு அப்புறம் விஜய் சாரை எடுத்துக் கொண்டால் அவரை எல்லாம் சாகும் வரை என்னால் மறக்க முடியாது கீழே விழுந்து விட்டால் பார்த்து பண்ணுங்க பார்த்து பண்ண கூடாதா என்று கேட்பார். அவர் இருக்கும் வழியாக செல்கிறோம் என்றால் கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைத்து பேசுவார் அந்த அளவிற்கு மிகவும் நல்ல மனிதர். ரஜினிகாந்த் எடுத்துக் கொண்டால் அவர் மிக அற்புதமான மனிதர் பாபா படம் சூட்டிங் பொழுதெல்லாம் செட்டுக்கு காலையில் எட்டு மணிக்கு வந்த அமர்ந்து விட்டு நியூஸ் பேப்பர் எதாவது படித்துக் கொண்டிருப்பார். அப்பொழுது நாம் வந்தால் வந்து அமருங்கள் என்று சொல்லி உன்னோட பழக்க வழக்கங்கள் என நீ என்ன செய்கிறாய் எப்படி இருக்கிறாய் என்று அமர்ந்து ஜாலியாக பேசுவார். இவர் மட்டுமல்ல அனைவருமே அப்படித்தான் ரொம்ப ஜாலியான கேரக்டருடன் பேசுவார்கள் பண்ணுவார்கள் என்று தெரிவித்தார்.

Advertisement