தலைலயே அடிச்சிக்கிச்சி. நான் பயந்து ஓடியாந்துட்ட – நிஷாவின் மாமியார் ஷேரிங்.

0
2313
Nisha
- Advertisement -

விஜய் டீவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. சின்னத்திரையில் பெண் காமெடியன்கள் இருப்பது அரிதான ஒரு விஷயம். அப்படி சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியவர் அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல்வேறு ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்துகொண்டு சாதித்து காட்டினார்.

-விளம்பரம்-
Image result for aranthangi nisha family

- Advertisement -

காமெடி செய்வது பெண்களாலும் முடியும் என்று மக்கள் மத்தியில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி அவர்கள் எண்ணம் தவறானது என்று நிரூபித்தவர் அறந்தாங்கி நிஷா. தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இதையும் பாருங்க : மேக்கப் இல்லாமல் சொகுசு காரில் இரவில் ஊர் சுற்றிய ஜாக்லின். வைரலாகும் வீடியோ.

-விளம்பரம்-

அறந்தாங்கி நிஷா கடந்த சில வருடங்களுக்கு முன் ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். இவர் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார். இந்நிலையில் நடிகை நிஷா அவர்களின் மாமனார் மற்றும் மாமியார் சேர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்கள்.

வீடியோவில் 4 : 50 நிமிடத்தில் பார்க்கவும்

அதில் நிஷா குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள். அதில் அவர்கள் கூறியது, ஷூட்டிங் முடித்து எப்போதும் நிஷா இரவு லேட்டாக தான் வருவார். காலையில் 11, 12 மணி என்ற அளவில் தான் எழுவர். ஒரு முறை குழந்தை குப்புற படுத்து இருப்பது என்பதை சொல்வதற்காக அவளை நான் எழுப்பினேன். உடனே அவள் எழுந்து உட்கார்ந்து தலையை தலையை அடித்துக் கொண்டார். எனக்கு என்ன பண்ணுவது என்று புரியவில்லை.

அந்த சமயத்தில் எனக்கு பதட்டமாக இருந்தது. பின் கீழே இறங்கி வந்து என்னுடைய கணவரிடம் இதை பற்றி நான் சொன்னேன். பின் என் மகனிடமும் சொன்னேன். அப்போது தான் என் மகன் சொன்னார். அவளை தூக்கத்தில் எழுப்பினால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் செய்வாள். அவளுக்கு தூக்கத்தின் போது யாரு எழுப்பினாலும் மிகவும் கோபம் படுவாள் என்று கூறினார்.

அதனாலேயே நாங்கள் நிஷாவை தூக்கத்தில் இருக்கும் போது எழுப்பவே மாட்டோம். அவளாக எழுந்து வந்தால் மட்டும் தான் என்று வேடிக்கையாகக் கூறினார். இப்படி இவர்கள் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement