அம்மாவை இழந்த தங்கைக்கு தாயை போல திருமணம் நடத்தி அழகு பார்த்த நாஞ்சில் விஜயன்.

0
77360
nanjil-vijayan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலகப்போவது யாரு. கலக்கப்போவது யாரு சாம்பியன், அது இது எது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ஸ்டான்ட் அப் காமெடியான இருந்து தற்போது சினிமாவிலும் கலக்கி கொண்டு வருகிறார் காமெடி நடிகர் விஜயன். தனது நகைச்சுவை மூலம் பலரையும் சிரிக்கவைத்த விஜயன் சொந்த வாழ்க்கையில் அதிக கஷ்டங்களை கண்டவர். தற்போது அவரது தங்கைக்கு திருமணம் முடித்து ஒரு தாயாக தனது கடமையை முடித்துள்ளார் விஜயன்.

-விளம்பரம்-

நாகர்கோவிலில் பிறந்ததால் இவருக்கு நாஞ்சில் விஜயன் என்று பெயர் வந்தது. பாலிடெக்னிக் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்னைக்கு வந்த இவர் கலக்கப்போவது சீசன் 4 ஆட்சியில் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு வெறும் 17 வயதுதான். பார்ப்பதற்கு சின்னப் பையனை போன்ற இருந்த அவரைக் கண்டு பலரும் கேலி செய்துள்ளனர். பரிட்சைக்கு போகிற மாணவர்கள் எப்படி மனப்பாடம் செய்வார்களோ, அப்படித்தான் மனப்பாடம் செய்து காமெடிகளை வைத்துள்ளார் விஜயன். ஆனால், அந்த சீசனில் சின்னப் பையனாக இருந்ததால் மற்றவர்களிடம் போட்டிபோட முடியாமல் அந்த சீசனில் இருந்து வெளியேறினார்.

இதையும் பாருங்க : 70 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலை யாத்திரை சென்று ஐயப்பன் தரிசனம் பெற்ற மகா குருசாமி M.N.நம்பியார்.

- Advertisement -

அதன் பின்னர் ஒரு நீண்ட இடைவேளைக்குப் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட ‘அது இது எது’ நிகழ்ச்சியில் பார்வையாளர்களை அழைத்துவரும் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்; அந்த சமயத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடிக்கவும் செய்தார். நாஞ்சில் விஜயன் அந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது தோன்றினாலும் வெளியில் பெரிதாக தெரியாமலேயே போனார். ஆனால், என்னமா ராமருடன் இணைந்துலேடி வேடம் போட்டு இவர் செய்த அந்த காமெடி இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. அந்த எபிசோடுக்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார் நாஞ்சில் விஜயன்.

லேடி கெட்டப் போட தயங்கும் ஒரு சிலர் மத்தியில் அடிக்கடி லேடி வேஷம் போட்டு காமெடிகள் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நாஞ்சில் விஜயன். மேலும், இவரை கலக்கப்போவது யார் டீமில் இருக்கும் பலரும் 4-இன்ச் விஜயன் என்று தான் அழைப்பார்கள். இப்படி திரையில் நம்மை சிரிக்க வைத்தாலும் இவரது வாழ்க்கையில் பெரும் சோகம் நிறைந்திருக்கிறது.

-விளம்பரம்-

சிறு வயதிலேயே நாஞ்சில் விஜயனின் அம்மாஇறந்து விட்டார்கள். சில வருடங்களா அவர்களுடைய அப்பாவும் உடம்பு சரியில்லாமல் இருந்தார். விஜயன்தான் அவருடைய தம்பி, தங்கச்சியை கவனித்து வந்தார். கடந்த நவம்பர் 14ஆம் தேதி தங்கை தமிழரசியின் திருமணம் நடைபெற்றுள்ளது அம்மாவை இழந்த தங்கைக்கு ஒரு அம்மாவாக இருந்து இந்த திருமணத்தை நடத்தி வைத்து இருக்கிறார் நாஞ்சில் விஜயன்.

Advertisement