விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, தற்போது மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. மேலும், பெண்களும் நகைச்சுவை செய்ய முடியும் என்ற கருத்தை தகர்த்தெறிந்தவர். “காமெடி எங்க ஏரியா “என்று ஆண்கள் பெருமிதமாக கட்டிய கோட்டையை உடைத் தெரிந்தவர். தற்போது காமெடியில் பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறி வந்தார்கள் மத்தியில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி அவர்கள் எண்ணம் தவறானது என்று நிரூபித்தவர் அறந்தாங்கி நிஷா.
தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.அது மட்டும் இல்லைங்க நம்ம அறந்தாங்கி நிஷா கூடிய சீக்கிரத்துல இன்னொரு குழந்தையை குழந்தையை பெற்று எடுக்க போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் நிஷாவிற்கு சீமந்தம் நடைபெற்றுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிஷா ஓய்வு எடுக்காமல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார் என்றும், அதோட துபாய் சென்று இருந்தார் என்றும் தெரியவந்தது.
அதோடு விஜய் டிவியில் நடக்கும் சாம்பியன்ஸ் 2 நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இப்படி கர்பிணிபெண் ஓய்வு எடுக்காமல் இருப்பது நல்லதன்று என ரசிகர்கள் திட்டி வருகின்றனர். இதுகுறித்து நிஷாவிடம் கேட்டபோது நிஷா கூறியது,நான் துபாய் போயிட்டு இரண்டு நாட்கள் முன்னாடிதான் வந்தேன். என்னை ஏர்போர்ட்ல பார்த்து எல்லாருமே , ஏன் இந்த மாதிரி சமயத்துல ரிஸ்க் எடுக்கிறீங்க என்று கேட்டார்கள். அவங்க திட்டனது எனக்கு கஷ்டமாக இல்லை.ஏன்னா இவங்க எல்லோரும் என் மேல இவ்வளவு அக்கறையா இருக்கிறதுக்கு அவங்களுக்கு நான் நன்றியை தெரிவிக்கிறேன். அதோடு இந்த சமயத்தில் எனக்கு நிறைய அட்வைஸ் பண்ணாங்க.
என்ன பொருத்த வரை நான் ரொம்ப தைரியமாகவும், நம்பிக்கையோடு தான் இருக்கிறேன். அதே மாதிரி தான் என் வயித்துல இருக்குற குழந்தையும் இருக்கணும். நான் அதை தான் இப்ப இருந்தே என் குழந்தைக்கு தர தொடங்கிவிட்டேன். மேலும், இந்த இடத்திற்கு வர என் வாழ்க்கையில நான் ரொம்ப கஷ்டப்பட்டு ,அடிபட்டு தான் வந்தேன். இப்ப நான் கொஞ்சம் சோர்வா இருக்குனு ஓய்வெடுத்து இருந்த இந்த அளவுக்கு நான் ஓடி உழைத்து எல்லாம் வீணாகப் போய்விடும். அதனால என்னால முடிஞ்ச வரைக்கும் நான் உழைப்பேன். அதோட கடவுள் புண்ணியத்துல எனக்கு பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும். என்ன மாதிரி தைரியமாகவும், தன்னம்பிக்கையோடும் வளர்ப்பேன் என்று கூறினார்.