சமீபத்தில் பிறந்த தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நிஷா. குயூடான கைக் குழந்தையின் புகைப்படங்கள்.

0
124892
Nisha

பொதுவாக பெண் மேடை ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் கொஞ்சம் அரிதான ஒன்று. அப்படி அறிமுகமான பல பெண் மேடை ஸ்டான்ட் அப் காமடியன்கள் விலாசம் இல்லாமல் சென்று விட்டார்கள். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, தற்போது மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. மேலும், பெண்களும் நகைச்சுவை செய்ய முடியும் என்ற கருத்தை தகர்த்தெறிந்தவர். காமெடியில் பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறி வந்தார்கள் மத்தியில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி அவர்கள் எண்ணம் தவறானது என்று நிரூபித்தவர் அறந்தாங்கி நிஷா.

தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.அது மட்டும் இல்லைங்க நம்ம அறந்தாங்கி நிஷா சமீபத்தில் அறந்தாங்கி நிஷாவிற்கு இரண்டாம் குழந்தை பிறந்துள்ளது. அதுவும் அவர் ஆசைபட்டபடியே பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அறந்தாங்கி நிஷா கடந்த சில வருடங்களுக்கு முன் ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

சொல்லப்போனால் திருமணம் ஆன பின்னர் தான் அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ரியாஸ் மற்றும் அறந்தாங்கி நிஷா தம்பதியருக்கு ஏற்கனவே பள்ளி செல்லும் வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிஷாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும், நானும் என் மகளும் நலமாக இருப்பதாகவும், பாப்பாவிற்கு சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்திருக்கிறோம். உங்கள் எல்லாருடைய வாழ்த்துக்கள் தேவை என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் நிஷா.


-விளம்பரம்-
Advertisement