ஈரோடு மகேஷின் மனைவி இந்த சன் மியூசிக் தொகுப்பாளி தானா. இவ்வளவு பெரிய மகள் வேறு இருக்கிறாரா.

0
60791
erode-mahesh
- Advertisement -

‘அசத்தப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மேடை காமெடியனாக அறிமுகமானவர் ஈரோடு மகேஷ். ஆமாங்க,நாம ஈரோடு மகேஷ் பற்றி தான் பார்க்கப்போறோம்…. இவருடைய உண்மையான பெயர் மகேஷ். இவர் ஈரோட்டில் 1981 ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடைய தந்தை திரு. சந்திரசேகரன்,தாயார் திருமதி. மீனாட்சி ஆவார்கள். மேலும், மகேஷ் அவர்கள் தன்னுடைய பள்ளிப் படிப்பை எல்லாம் ஈரோட்டில் தான் முடித்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழில் முனைவர் (Phd.,) பட்டப் படிப்பை தொடர்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் ஒரு சிறந்த தமிழ் ஆசிரியரும் ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியில் ஸ்டாண்டர்ட் காமெடியனாக தொலைக்காட்சிக்கு அறிமுகமானர். மேலும்,இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

பின் இவரை எல்லாரும் அடைமொழி வைத்து “ஈரோடு மகேஷ்” என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். தற்போது இவர் காமெடி நடிகர் மட்டும் இல்லாமல் நிகழ்ச்சி தொகுப்பாளர், நடுவர், நடிகர் என பன்முகம் கொண்டவராக விளங்கி வருகிறார். அதுமட்டும் இல்லாமல் குடும்பமே ஈரோடு மகேசை மறக்கும் அளவிற்கு தற்போது அவர் பிஸியாக உள்ளார். மேலும், சின்னத் திரையில் மிகப் பெரிய நட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார் மகேஷ். இதனை தொடர்ந்து ஈரோடு உடைய மனைவி ஸ்ரீதேவி. இவர் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்தவர். மேலும், இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு அழகான மகளும் உள்ளார். மேலும், அவளுடைய பெயர் அமிழ்தா.

- Advertisement -

இவர் ஓரு தமிழ் ஆசிரியர் என்பதால் தன் மகளுக்கு அழகான தமிழ் பெயரை வைத்து உள்ளார். மேலும், மகேஷ் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் வெற்றி பெற்றதற்கு என்னுடைய தாய், மனைவி, மகள் தான் என்று அடிக்கடி சொல்லுவார். இவர்கள் மூவரும் தான் அவருடைய வெற்றி பயணத்திற்கு காரணம். மேலும், மகேஷ் தாய் கருவுற்றிருந்த போதே கேட்கும் திறனை இழந்து விட்டாராம். ஆனால், அவர் மனம் உடைந்து போகாமல் இந்த அளவிற்கு மகேசை வளர்த்து உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது. மேலும்,அவர் அன்னை மகேஷையும்,அவருடைய அண்ணனையும் வளர்க்க ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளாராம்.

மேலும்,ஈரோடு மகேஷ் அவர்கள் 2014 ஆம் ஆண்டு விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளி வந்த “சிகரம் தொடு” என்ற படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானர். அதற்கு பிறகு ஜம்புலிங்கம் 3d, இணையதளம் என சில படங்களில் நடித்து உள்ளார். அதோடு அவருக்கு சினிமாவில் சரியான பட வாய்ப்புகள் அமையாததால் சின்னத் திரைக்கே மீண்டும் வந்து விட்டார். தற்போது ஈரோடு மகேஷ் அவர்கள் சின்னத் திரையில் ஒரு கலக்கு கலக்கி கொண்டு வருகிறார். சமீபத்தில் ஈரோடு மகேஷ் தனது மகள் மற்றும் மனைவியுடன் விஜய் டிவி செட்டிற்கு வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

Advertisement