ஓவியாவின் நடிப்பில் களவாணி Part 2 உறுதி செய்யப்பட்டது !

0
1071
vimal-oviya

7 வருடங்களுக்கு முன்பு ஓவியா தமிழகத்திற்கு அறிமுகமாகிய படம் தான் களவாணி. நடிகர் விமல் அவர்களுக்கு அந்த படம் ஒரு திருப்புமுனையாக இருந்தது. அதே போல் இயக்குநா் சற்குணத்திற்கும் அது தான் முதல் படம். படத்தில் காதல் காட்சிக்கும் காமிடிக்கும் எந்த குறையும் இருக்காது. பஞ்சாயத்து கதாபாத்திரத்தில் கஞ்சா கருப்பு அசத்தி இருப்பாரு, பரோட்டா சூரி அவர் பங்கிற்கு அனைவரையும் சிரிக்க வைத்திருப்பாரு.

Oviya

“ஆடி போய்ட்டு ஆவணி வந்தால் என் மகன் டாப்ஆ வருவான்” என்று நடிகை சரண்யா பேசிய வசனம் செம ஹிட். இவ்வாறு இருக்க இப்போது அதே கூட்டணியில் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இந்த தகவலை இயக்குநா் சற்குணம் தனது பிறந்த நாளான நேற்று தெரிவித்தார்.
oviyaa

மீண்டும் இந்த கூட்டணி இணைந்தால் படம் நிச்சயம் வெற்றி பெரும். அந்த படத்தில் ஓவியவிற்கான கதாபாத்திரம் படத்திற்கு வலு சேர்த்து, இரண்டாம் பாகத்திலும் அது தொடர்ந்தால் ஓவியாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவின் புகழ் உச்சத்தை தொட்டுவிட்டது. அவரது அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்.