கள்ளக்காதலால் கொலை முயற்சி ! கணவர் மீது பிரபல நடிகை போலீசில் புகார் ! புகைப்படம் உள்ளே

0
1197
Actress chitra

சமீபத்தில் சினிமா பிரபலங்கள் சிலர் திருமணத்திற்கு பிறகு பிரச்சனை வந்து கொலை செய்யும் அளவிற்கு கூட சென்று விடுகிறார்கள். சமீபத்தில் பிரபல நடிகை தாடி பாலாஜி மனைவி கூட தனது கணவர் தாடி பாலாஜி தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக போலீசில் புகார் அளித்தார். தற்போது பிரபல கன்னட நடிகை ஒருவர் தனது கணவர் மீது கொலை மிரட்டல் புகாரை அளித்துள்ளார்.

chitra

ஆந்திராவில் பிறந்த இவர் கன்னட சினிமாவில் பல படங்களில் கதாநாயகியகவும்,வில்லியாகவும் நடித்தார். பின்னர் பட வாய்ப்புகள் குறையவே கன்னட மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலாஜி போத்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட சைத்ரா ரெட்டி 12 ஆண்டுகள் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்.தற்போது தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ள தொடர்பு உள்ளதாகவும். இதனால் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாகவும் போலீஸிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கூறி புவனேஷ்வர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.இதனையடுத்து புவனேஷ்வர் போலீசார் பாலாஜி போத்ரா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.