சன் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. சன்டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பு தந்த மெட்டிஒலி, நாதஸ்வரம் சீரியல்களை இயக்கிய இயக்குனர் திருமுருகன். ஆரம்பத்தில் இயக்குனராக இருந்த இவர் தற்போது அவரே இயக்கி நடிக்கவும் செய்கிறார்.அதுவும் தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனமாக திரு பிக்சர்ஸ் மூலம் கல்யாண வீடு என்ற ஒரு புது சீரியலையை சன் டிவியில் ஒளிபரப்பி வந்தார்.
இந்த சீரியல் குடும்ப பெண்கள் இடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்று மகத்தான வெற்றியையே நோக்கி சென்று கொண்டு இருந்தது. . இந்த தொடரில் திருமுருகனுக்கு ஜோடியாக சூர்யா கதிரேசன் என்ற கேரக்டரில் ஸ்பூர்த்தி கவுடா நடித்து வந்தார். இந்த சீரியல் வெற்றிகரமாக 684 எபிசோடுக்கு மேல் ஓடியது. இப்படி ஒரு நிலையில் இந்த சீரியல் கடந்த ஆண்டு நிறைவடைந்தது.
இதையும் பாருங்க : அறுவை சிகிச்சைக்கு பின் வீல் சேரில் வீட்டிற்கு வந்த அர்ச்சனா – ஹேடர்ஸ்களை கூட சோகத்தில் ஆழ்த்திய வீடியோ.
இந்த சீரியல் நிறைவடைவதற்கு சில மாதங்கள் முன்னர் தான் ஸ்பூர்த்தி கவுடா திடீரென்று இந்த சிரியலில் இருந்து விலகி இருந்தார். அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்ததால் இந்த சீரியலில் இருந்து விலகினார். அதே போல இந்த தொடரில் கோபியின் முன்னாள் காதலியாக ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அஞ்சனா. ஸ்பூர்த்தி கௌடாவை தொடர்ந்து தற்போது அஞ்சனாவிற்கு திருமண யோகம் கைகூடி வந்து நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை நடிகை அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு இவரது ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை அஞ்சனா கல்யாண வீடு சீரியலுக்கு பின் மலையாளத்தில் Sasneham என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது திருமணம் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.