சீரியலில் நடிக்க இதைக்கூட பண்ணுவாங்களா..? பிரபல சீரியல் நடிகை செய்த செயல்..?

0
1095
jeevitha-actress

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் ‘கல்யாணமாம் கல்யாணம்’ சீரியலில், மார்டன் வில்லியாக மிரட்டுபவர் ஜீவிதா. ஹோம்லி லுக், மார்டன் லுக் இரண்டுமே அவர் முகத்துக்குப் பொருந்துவது கூடுதல் பிளஸ். அவரிடம் பேசுவதற்கு முன்னர் குட்டி பயோ…

Kalyanamam Kalyanam

பெயர்: ஜீவிதா
குடும்பம்: நான், அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி
அறிமுகம்: ஏவி.எம் புரொடக்‌ஷன்ஸ்
தற்போது நடிப்பது: ‘கல்யாணமாம் கல்யாணம்’
பிடித்த கதாபாத்திரம்: எதுவானாலும் என் பெஸ்ட்டைக் கொடுப்பேன்.
எதிர்காலத் திட்டம்: நடிக்கிறது மட்டும்தாங்க!

நாமக்கல் மாவட்டத்தின் நாமகிரிப்பேட்டை என் சொந்த ஊர். அப்பா பிஸினஸ் பண்றார். நான் இளங்கலை படிச்சிருக்கேன். எங்க வீட்டுல யாருமே சினிமா பின்னணி இல்லாதவங்க. எனக்கும் சினிமாவில் நடிக்கும் எண்ணம் இருந்ததில்லை. இந்தப் பயணம் திடீர்னு ஆரம்பிச்சதுதான். எனக்குச் சின்ன வயசிலிருந்தே படிப்பு தவிர எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டீஸில் அதிக ஆர்வம் இருந்துச்சு. இளங்கலை படிப்பை முடிச்சதும், சென்னையில் ஏதாவது ஒரு டான்ஸ் இன்ஸ்டிடியூட்டில் டான்ஸ் கத்துக்கிட்டு, எங்க ஊர்ல டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிக்கிறதுதான் என் ஆசையா இருந்துச்சு. அதுக்காக சென்னை வந்தேன். பொதுவா, ஊரிலிருந்து சென்னை வர்றவங்களுக்கு ஷூட்டிங் பார்க்கும் ஆசை இருக்கும். அப்படித்தான் நானும் ஷூட்டிங் பார்க்க ஏவி.எம் ஸ்டுடீயோவுக்குப் போனேன். அங்கே என்னோட நடவடிக்கையைப் பார்த்துட்டு, ஏவி.எம் புரொடக்‌ஷனில் நடிக்க கூப்பிட்டாங்க. இப்படித்தான் என் மீடியா பயணம் ஆரம்பிச்சது” என உற்சாகத்துடன் தொடர்கிறார் ஜீவிதா.

actress jeevitha

`நடிக்கப்போறேன்னு சொன்னதும் வீட்டில் யாருமே எனக்கு சப்போர்ட் பண்ணலை. என்னால் ஒரு விஷயத்தைச் செய்ய முடியாதுன்னு யாராவது சொன்னால், அதை செஞ்சு முடிச்சுட்டுத்தான் அவங்ககிட்ட பேசுவேன். அப்படித்தான் இதிலும் நடந்துச்சு. நடிப்பில் என் திறமையை எப்படி வெளிப்படுத்த முடியும்னு யோசிச்சேன். ஒரு படத்தில் நடிச்சேன். அந்தப் படம் சரியா ஓடலை.

அப்புறம்தான் சப்போர்ட்டிங் ரோல்ஸ் பண்ண ஆரம்பிச்சேன். ஒன்றரை வருஷம் கழிச்சு, இனி அதுதான் என் வேலை. அதில் என்னால் முடிஞ்ச அளவுக்கு உழைக்கிறேன் என வீட்டில் உள்ளவங்க புரிஞ்சுக்கிட்டு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சாங்க. இப்போவரை என் அம்மா ஃபுல் சப்போர்ட்” எனச் சிரித்தவர், தன் கதாபாத்திரம் பற்றி பகிர்ந்தார்.

எனக்கு நீளமான முடி. இந்த சீரியலுக்காகவே முடியை கட் பண்ணிட்டேன். வெயிட்லாஸ் பண்ணிருக்கேன். அதுமட்டுமா? என் நெற்றியில் ஒரு மரு இருக்கும். அந்த மருவை இந்த சீரியலுக்காக எடுத்துட்டேன். காஸ்டியூமுக்காக நிறைய செலவு பண்றேன். ஒவ்வொரு டிரெஸ்லையும் எப்படி வித்தியாசம் காட்டலாம்னு யோசிச்சு யோசிச்சு பண்றேன். என்னோடு எத்தனை பேர் நடிச்சாலும் பிரச்னையில்லை. அத்தனை பேர்களிலிருந்து என் பெஸ்ட்டை எப்படிக் கொடுக்கலாம்னு யோசிப்பேன். அது சின்ன விஷயமாக இருந்தாலும் சரி, பெரிய விஷயமாக இருந்தாலும் சரி” என்றார் ஜீவிதா.