படத்துக்காக கிளாஸ் போன கமல், கில் பில் படத்துக்கே இன்ஸபிரேஷனாக மாறிய ஆளவந்தான் படம் குறித்து நீங்கள் அறிந்திராத விஷயம்.

0
807
aalavandhan
- Advertisement -

எஸ்.தானு தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி 2001 ஆம் ஆண்டு திரகை்கு வந்த தமிழ் ஆக்சன் திரில்லர் படம். இப்படத்தில் கமலஹாசன் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் ரவீனா பாண்டன், மனிஷா கொய்ராலா, சரத் பாபு, கொல்லிப்புடி மாருதி ராவ், மதுரை ஜி.எஸ்.மணி ஆகியோர் நடித்துள்ளனர் இப்படம் இந்தியில் அபய் என்ற தலைப்பில் மூன்று வெவ்வேறு நடிகர்களுடன் படமாக்கப்பட்டு வெளியிடபட்டது.

-விளம்பரம்-

ஆளவந்தான் திரைப்படம் இப்பொழுது 3d டெக்னாலஜியில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது 3d படமாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும் கமல்ஹாசனின் பிறந்த நாளான நவம்பர் 7ஆம் தேதி படம் வெளியாக அதிகபட்ச வாய்ப்பு உள்ளது. ஆளவந்தான் திரைப்படத்தைப் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

ஆளவந்தான் திரைபடத்தின் கதை 1984 ஆம் ஆண்டு கமலஹாசனால் எழுதப்பட்ட ‘தாயம்’ இன்னும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட கதை ஆகும் பின்னர் அந்த கதையை கமல் காஹசன் திரைக்கதையாக மாற்றி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் அதனை ஒப்படைத்து ஆளவந்தானை படமாக்க சொன்னார்

இப்படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட் மக்களிடையே மிகவும் பேசப்பட்ட ஒன்று ஆஸ்திரேலிய கட்டிங் எட்ஜ் கிராபிக்ஸ் ஃபார்முலாவில் எடுக்கப்பட்ட இந்த படம் ஸ்பெஷல் எஃபெக்ட்க்காக தேசிய விருதையும் பெற்று கலக்கியது.

-விளம்பரம்-

கமல் இந்த படத்தில் மேஜர் விஜயகுமார் எனும் ரோலில் நடித்திருந்தார் இதற்காக என்டிஏ சென்று கிராஸ் கோர்ஸ் முடித்துள்ளார். கமல் சில ஆண்டுகள் பயிற்சி பெற்று கற்றுக்கொள்ள வேண்டிய இந்த பயிற்சியை மூன்றே மாதங்களில் முடித்திருக்கிறார்.

இப்படத்துக்கு சங்கர் ,ஏஷான்,லாய் கூட்டணி இசை அமைத்திருந்தது .இந்த இசை கூட்டணியில் வெளியான முதல் திரைப்படம் ஆளவந்தான் தான் இதே கூட்டணி தான் கமல் இயக்கத்தில் வெளியான விஸ்வரூபம் படத்துக்கும் இசையமைத்தது

இப்படத்தின் கதாநாயகிகளாக ரவீனா பாட்டனும், மனிஷா கொய்ராலாவும் நடித்திருந்தனர் .ஆனால் இப்படத்துக்கு முதலில் பேசப்பட்டவர்கள் இவர்கள் இல்லையாம். நடிகைகளான சிம்ரனும் ராணி முகர்ஜியும்தான் முதலில் இந்த படத்தில் நடிப்பதாக இருந்ததாம் வேறு சில காரணங்களால் அது முடியாமல் போக அதன் பின்னர் தான் இருவரும் மாற்றப்பட்டுள்ளனர்

கமலஹாசன் இரட்டை இடங்களில் நடித்த இத்த படத்தில் அதிநவீன டெக்னாலஜியாக கருதப்பட்ட மோஷன் கண்ட்ரோல் கேமரா பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் இந்த டெக்னாலஜி முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட படம் ஆளவந்தான் தான்.

இந்த படத்தில் ரத்தம் தெறிக்கும் சில வன்முறை காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றது .இதை திரையில் அப்படி காட்ட முடியாது என்னும் காரணத்தால் காட்சிகளை லைவ் ஆக்சன் அனிமேஷன் ஆக உருவாக்கினர். பலரையும் ஆச்சரியப்படுத்திய அனிமேஷன் மேஜிக் ஆனது ஹாலிவுட் இயக்குனர் குவிண்டின் டோரண்டினாவையும் விட்டு வைக்கலையாம். ஆம், அவர் எடுத்த கில்பில் படத்துக்கு ஆளவந்தானின் இந்த அனிமேஷன் தான் இன்ஸ்பிரேஷன் என்று அவர் கூறுகிறார்.

இப்படத்தின் சுவாரஸ்யமான இன்னொரு விஷயம் ஜெயம் படத்தின் மூலமாக பிரபலமான நடிகர் ஜெயம் ரவி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக ஜெயம் ரவி இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்

இந்த படத்தில் நந்து என்னும் கதாபாத்திரத்துக்காக கமல்ஹாசன் நிர்வாணமாக சில காட்சிகளில் நடித்திருந்தார். ஆனால் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட போது நிர்வாண காட்சிகள் நீக்கப்பட்டது. இதனால் படத்தில் அந்த காட்சி இடம் பெறவில்லை. படம் வெளியான சமயத்தில் இப்படம் வணிக ரீதியாக சரியாக வசூல் வேட்டை நடத்தவில்லை . ஆனால் கமலின் கரியரில் மிக முக்கியமான படங்கள் ஒன்றாக ஆளவந்தான் உள்ளது. அமெரிக்காவில் பென்டாஸ்டிக் பீஸ்ட் 2016 இன் போது ஆளவந்தான் திரையிடப்பட்டது இந்த படம் அமெரிக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.

Advertisement