ரஜினியை கிண்டலடித்த கோமாளி ட்ரைலர்.! தயாரிப்பாளருக்கு போன் செய்த கமல்.!

0
7776
komali
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான நடிகர் ஜெயம் ரவி, சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி ரஷி ரஷி கண்ணா நடிப்பில் வெளியான ‘அடங்காமறு ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. 

-விளம்பரம்-
rajini-kamal

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான நடிகர் ஜெயம் ரவி, சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த படத்தை குறும் பட இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு 9 கெட்டப் இருப்பதாக இந்த படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : இந்த வாரமும் வித்யாசமாக நடந்தப்பட்ட எலிமினேஷன்.! வெளியான செம தகவல்.! 

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் ஒன்றும் வெளியாகி இருந்தது. அதில் கடைசியில் வரும் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கலாய்க்கும் விதத்தில் அமைந்த, நான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற வசனத்திற்கு பாராட்டுகளை விட எதிர்ப்புகளே அதிகமாக வலுத்து வருகின்றன.

இந்த டிரெய்லரை பார்த்து கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் நம்மவர் அவர்கள் இன்று காலை கோமாளி ட்ரைலர் பார்த்தார். அதில் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதை பற்றிய விமர்சனத்தை பார்த்தவர் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement