மக்களவைத் தேர்தலில் போட்டி, கூட்டணி குறித்து கமல்ஹாசன் அளித்த பரபரப்பு பேட்டி.

0
119
- Advertisement -

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து கமலஹாசன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

அதில் அவர், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் வரும் 22.01.2024 அன்று மாலை 4 மணிக்கு புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டமும், மறுநாள் 23.01.2024 அன்று காலை 11.30 மணிக்கு தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டமும் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.

- Advertisement -

மக்கள் நீதி மையம் கட்சி கூட்டம்:

இப்படி இருக்கும் நிலையில் நேற்று புதுச்சேரி மாநில செயற்குழு நிர்வாகிகள் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றிருக்கிறது. இதில் கமலஹாசன் கலந்து கொண்டிருந்தார். பின் அவர் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை குறித்து ஆலோசனையும் நடத்திருக்கிறார். அதனை அடுத்து கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார்.

கமல்ஹாசன் பேட்டி:

அப்போது அவர், இந்த கூட்டத்தில் கட்சியினுடைய கட்டமைப்புகளை பற்றி பேசி இருக்கிறோம். அதேபோல் தேர்தல் பற்றியும், தேர்தலுக்கான ஏற்பாடுகள் பற்றியும் பேசி இருந்தோம் என்று கூறிக் கொண்டிருந்தார். உடனே செய்தியாளர் ஒருவர், உங்களுடைய தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ளப்பட்டதா? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு கமலஹாசன், அது பற்றி தற்போது எதுவும் பேசவில்லை.

-விளம்பரம்-

தேர்தல் கூட்டணி குறித்து சொன்னது:

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. தேர்தல் கூட்டணி என்பது நான் போட்டியிடும் தொகுதி குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்று பேசி இருந்தார். அதற்குப் பிறகு நேற்று கோலாகலமாக அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழா கும்பாபிஷேகம் குறித்து செய்தியாளர்கள் கேட்டு இருக்கிறார்கள்.

ராமர் கோவில் குறித்து சொன்னது:

அதற்கு கமலஹாசன், ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து நான் 30 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்துவிட்டேன். அதே கருத்து தான் இப்போதும். அதில் மாற்றமில்லை என்று கூறி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இன்றும் இந்த கட்சிக் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது கமலஹாசன் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் கூட்டம் குறித்த தகவல் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement