சொந்த மாமா(கமல்) கட்சியில் இணையாமல் வேறு கட்சியில் இணைந்தது மகன் – சுஹாசினி சொன்ன காரணம்

0
526
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சுஹாசினி. இவர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடகர், தொகுப்பாளர் என பல துறைகளில் கலக்கி கொண்டு இருக்கிறார். இவர் பிரபல இயக்குனர் சாருஹாசனின் மகள் அவர். மேலும், இவரது அப்பாவின் சகோதரர் உலக நாயகன் கமலஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழும் மணிரத்தினத்தின் மனைவி ஆவார்.

-விளம்பரம்-

இவர்களுக்கு நந்தன் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர் தன்னுடைய 15 வயதிலேயே லெனினிஸம் சார்ந்த ‘Contours of Leninism’ என்ற ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவருக்கு சின்ன வயதில் இருந்தே அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர். பின் சிபிஎம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) கட்சியிலும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் கேரளா கண்ணூரில் இரண்டாவது ‘Happiness Film Festival’ திரைப்பட விழா நடைபெற்றிருக்கிறது.

- Advertisement -

விழாவில் சுகாசினி பேசியது:

இதில் நடிகை சுகாசினியும் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது இவர் தன்னுடைய மகன் நந்தன் குறித்து சொன்னது, என்னுடைய மகன் நந்தன் மற்ற குழந்தைகளைப் போல கிடையாது. பள்ளியிலிருந்து வந்த உடனே பாராளுமன்றத்தில் நடந்த உரைகளை எல்லாம் கேட்பான். அதைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். 12 வயதிலேயே நந்தன் மூலதனம் என்ற புத்தகத்தை எடுத்து வாசிப்பார். ஒருநாள் கையில் புத்தகங்களை எடுத்துக்கொண்டு அவனாகவே சி.பி.எம் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டான்.

நந்தன் குறித்து சொன்னது:

.மேலும், அங்கிருப்பவர்கள் இவன் காரில் வருவதை பார்த்து விடக்கூடாது என்பதற்காக காரை வேறு ஒரு இடத்தில் பார்க்க செய்ய சொல்லி அலுவலகத்திற்கு சென்று விட்டான். அவர்கள் இவனை யார்? எங்கிருந்து வருகிறார்? என்றெல்லாம் கேட்கவில்லை. முதலில் அவர்கள் கேட்டது சாப்டியா? என்று தான் கேட்டார்கள். இதுதான் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சிறப்பே. சாப்பிட்ட பின்பு தான் நந்தன் கட்சியின் செயலாளர்களை சந்தித்து பேசினான் .

-விளம்பரம்-

நந்தன் சொன்னது:

அப்போது அவர்கள் தந்தையின் பெயரை கேட்டு இருக்கிறார்கள். அதற்கு நந்தன் மணிரத்தினத்தின் உண்மையான பெயரான கோபால ரத்தினம் சுப்பிரமணியம் என்ற பெயரை கூறியிருக்கிறான். என் பெயரையும் சேர்த்து கூறிய பிறகுதான் அவன் மணிரத்தினம்- சுகாசினியின் மகன் என்று பலருமே அடையாளம் கண்டு கொண்டார்கள். அதற்கு பிறகு தான் அவன் சிபிஎம் கட்சியின் உறுப்பினராக மாறினான் என்று கூறியிருக்கிறார்.

சுகாசினி குறித்த தகவல்:

மேலும், நடிகை சுஹாசினி தமிழ் சினிமாவில் “நெஞ்சத்தை கிள்ளாதே” படத்தின் மூலம் தான் அறிமுகமாகினார். பின் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஆங்கில படத்தில் கூட ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 80ஸ் தொடங்கி தற்போது வரை சுஹாசினி மிகவும் பிசியாக நடித்து வருகிறார். மேலும், இவர் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல நிகச்சிகளில் தொகுப்பாளராகவும், ஜட்ஜ் ஆகவும் இருந்து வருகிறார்.

Advertisement