மஹத்தை காதலிப்பதாக சொன்ன யாஷிகா..! கமல் கொடுத்த அட்வைஸ் .?

0
240
mahat-and-yashika

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள யாஷிகா மற்றும் மஹத் மிக நெருக்கமாக இருந்து வந்தனர். இதில் மஹத் மீது காதலில் இருந்து வருவதாக சில நாட்களாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் மஹத் மீது தனக்கு காதல் இருந்ததாக அனைவர் முன்பும் போட்டுடைத்துள்ளார் யாஷிகா.

Mahat yashika

சில நாட்களுக்கு முன்னர் மிக் பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் சென்றிருந்தார். அப்போது ‘யாஷிகா மற்றும் மஹத்தின் உறவு நட்ப்பையும் தாண்டி புனிதமானது’ என்று கேள்வி கேட்கப்பட்டிருந்த போது அணைத்து போட்டியாளர்க்களும் ‘ஆம்’ என்று கூறியபோது மஹத் மட்டும் ‘இல்லை ‘ என்று கூறிவிட்டார். இதனால் மனமுடைந்த யாஷிகா, தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்தார்.

இதன் மூலம் யாஷிகா, மஹத்தை காதலிப்பது உறுதியாகி இருந்தது. இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 11) ஒளிபரப்பபட்ட நிகழ்ச்சியில் கமல் அவர்கள் போட்டியாளர்களை அகம் டிவியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது மஹத் ‘நோ’ சொன்னது குறித்து யாஷிகாவிடம் கேட்ட போது ‘நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தபோதே எனக்கு மஹத் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. ஒரு கட்டத்தில் அவர் மீது நான் விழுந்தது உண்மைதான். ஆனால், அவருடைய சந்தர்ப்பம் எனக்கு புரிகிறது. அதனை நான் மதிக்கிறேன்’ என்று யாஷிகா பதிலளித்திருந்தார்.

yashika-Anand

யாஷிகா கூறியதற்கு கமல் அவர்கள் ‘அன்பு கிடைக்குதோ இல்லையோ.. நாம் கொடுத்துவிடவேண்டும். காதல் என்பது மிகப்பெரியது, நான் என் வாழ்க்கையில் பலமுறை செய்துள்ளேன். எதுவுமே பொய் இல்லை. அன்பு திரும்ப கிடைக்கவில்லை என்றால் அந்த அன்பை நானே வைத்துக்கொண்டேன். என்னுடைய காதல், அன்பு, நட்பு எதையும் மறக்கவில்லை.’ என்று யாஷிகாவிற்கு அறிவுரை கூறி யாஷிகாவை மனம் தெற்கப்பார்த்தார்.

kamal

ஏற்கனவே மஹத் மற்றும் யாஷிகாவிற்கும் இடையே ஏதோ ரொமான்ஸ் ஓடிக்கொண்டிருப்பதை மக்கள் கிண்டல் செய்துகொண்டு வந்திருந்தனர். சில நாட்களுக்கு முன்னர் யாஷிகா மற்றும் மஹத்தின் உறவு குறித்து பேசிய மஹத்தின் காதலி பிரச்சி மிஸ்ரா, ‘அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்,மஹத் செய்வது தவறு என்று யாஷிகா கூறினால் தான் பிரசச்னை. ஆனால், அவர் அவ்வாறு கூறவில்லை. மஹத் எப்போது இப்படி தான் அனைவரிடமும் காமெடியாக இருப்பார்’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மஹதை காதலிப்பதாக யாஷிகா கூறியதற்கு மஹத்தின் காதலி என்ன பதில் கூறப்போகிறார்கள் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.