நல்லா நடிக்கிற, அப்புறம் ஏன் இப்படி பண்ற – மோகனுக்கு உலக நாயகன் கொடுத்துள்ள அட்வைஸ்

0
311
- Advertisement -

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன் ஹீரோவாக நடித்திருக்கும் ‘ஹரா’ படம் வெளியான நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் குறித்து பகிர்ந்த தகவல் தான் இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த் என்று பல முன்னணி நடிகர்கள் பட்டைய கிளப்பிக் கொண்ட இருந்த காலகட்டத்தில் இவர்களுக்கு எல்லாம் செம காம்படிஷன் கொடுத்தவர் நடிகர் மோகன். 80களில் இவரது நடிப்பின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து மோகன் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆகியது. பின்பு பிரபல இயக்குனர்களின் பார்வை மோகன் மீது திரும்பியது. இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் இரட்டை வால் குருவி, மணிரத்தினம் இயக்கத்தில் மௌன ராகம், மணிவண்ணன் இயக்கத்தில் நூறாவது நாள் போன்ற அவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட்டான நிலையில், நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றார்.

- Advertisement -

மைக் மோகன் ஆன மோகன்:

முதல் முதலில் மோகன், கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த கோகிலா படத்தில் தான் அறிமுக நாயகனாக நடித்தார். அதன் பிறகு ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுக்கும் டஃப் கொடுத்தார். குறிப்பாக அவர் நடித்த படங்களில் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் தான். அதேபோல் அவர் கொடுக்கும் எஸ்பிரஸினுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இதனாலேயே அவர் ‘மைக் மோகன்’ என்று அழைக்கப்பட்டார்.

சினிமாவில் பிரேக்:

இப்படி தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து கொண்டு இருந்த அவர், திடீரென சில சறுக்கல் ஏற்பட்டு சினிமாவில் இருந்து விலகினார். பல ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அந்த வகையில் விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் மோகன், ஹீரோவாக நடித்த ஹரா படமும் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

மோகன் பேட்டி:

சமீபத்தில் மோகன் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தனக்கு கொடுத்த அட்வைஸ் பற்றி கூறியுள்ளார். அதில், “கோகிலா படத்தில் சில நாட்கள் நடித்துவிட்டு பின்பு நான் சூட்டிங் செல்லவில்லை. ஏனெனில் எப்போது சூட்டிங் என்று எனக்கு தெரியாது. நான் போகாத நாட்களில் கமலுடன் நடிக்க வேண்டிய காட்சிகள் வேறு இருந்திருக்கிறது. நான் போகாததால் கமலும் காத்திருந்திருக்கிறார். பிறகு தந்தி போட்டு தான் என்னை வரவழைத்தார்கள்.

கமலின் அட்வைஸ் :

தொடர்ந்து பதறி அடித்து சூட்டிங் சென்ற நான், பாலு மகேந்திரா சாரிடம் பேசவே இல்லை. அப்போதுதான் கமல் சார் என்னிடம் வந்து, ‘நன்றாக நடிக்கிறாய் பிறகு ஏன் இப்படி செய்யற’ என்று கேட்டார். அதற்கு நான், இல்லை சார் எனக்கு சூட்டிங் எப்போது என்று தெரியவில்லை என்று கூற. அவர், ஒரு டைரி வைத்துக்கொள். எப்போதெல்லாம் சூட்டிங் என்று அதில் குறித்து வைத்துக் கொள் என்று சொன்னார். பின் வந்த காலங்களில் நான் அதை தான் பாலோ செய்தேன் என்று மோகன் சொன்னார். மேலும் ஹரா, கோட் படங்களைத் தொடர்ந்து மோகன், நிறைய படங்களில் கமிட் ஆகியுள்ளார் என்று தெரிகிறது.

Advertisement