அஜித்தின் முதல் பட இயக்குனருக்கு நேர்ந்த சோகம் – அன்பே சிவம் படத்தில் ‘சுனாமி’ வசனமாக வைத்த கமல். அவரே சொன்ன வீடியோ.

0
547
kamal
- Advertisement -

அஜித் நடித்த முதல் படத்தின் சூட்டிங்கில் நடந்ததை தான் அன்பே சிவம் படத்தில் வைத்தது குறித்து கமல் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமா உலகில் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து இருக்கிறார். இவர் சினிமா திரை உலகில் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் இந்தியத் திரைப்பட நடிகர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னனிப் பாடகர், நடன அமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர்.
இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகளவில் இவருக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இறுதியாக கமல் நடிப்பில் வெளியாகி இருந்த ‘விக்ரம்’ படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார்.

- Advertisement -

அன்பே சிவம் படம்:

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. இதனை அடுத்து கமல் அவர்கள் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படி இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் கமலின் அன்பே சிவம் படமும் ஒன்று. இந்த படத்தில் கமலுடன், மாதவன், நாசர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

பிரேம புஸ்தகம் படம்:

இந்த படத்தில் கமல் மாதவனிடம் கதை சொல்லும் போது தன்னுடைய தந்தை கடல் அலையின் முன்பு புகைப்படம் எடுக்க சொன்னார். அப்போது அந்த கடல் அலை கொன்று விட்டது என்றும் சுனாமி குறித்தும் பல விஷயங்களை கூறியிருப்பார். இது உண்மையிலேயே நடந்த சம்பவத்தை தான் இந்த படத்தில் வைத்திருக்கிறார்கள். அதாவது, அஜித் முதன் முதலாக தெலுங்கில் பிரேம புஸ்தகம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 1992 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குனர் கோல்லுபுடி மாருதி ராவ் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-
கோல்லுபுடி ஸ்ரீநிவாஸ் மற்றும் கோல்லுபுடி மாருதி ராவ்

உண்மையில் நடந்தது:

இவருடைய மகன்தான் கோல்லுபுடி ஸ்ரீநிவாஸ். இவர்தான் அஜித்தை வைத்து பிரேம புஸ்தகம் என்ற படத்தை இயக்கியிருந்தார். அப்போது தன் தந்தையுடன் சேர்ந்து கடலுக்கு சென்றிருந்தார். படத்தின் டைட்டில் வைப்பதற்காக பெரிய அலை முன்பு ஒரு புகைப்படத்தை எடுக்கச் சொன்னார். ஆனால், புகைப்படம் எடுக்கும் போது அந்த கடலலை அவரை இழுத்துச் சென்று விட்டது. வரும்போது அவர் பிணமாக தான் வந்தார். அதற்கு பிறகு அவருடைய தந்தை தன்னுடைய மகனின் ஆசையை நிறைவேற்ற அந்த படத்தை இயக்கியிருந்தார்.

கமல் அளித்த பேட்டி:

அந்த படம் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. அந்த படத்திற்காக நந்தி விருது கூட கிடைத்திருந்தது. இந்த படத்தின் காட்சியை தான் கமல் அன்பே சிவம் படத்தில் தந்தையை கடல் அலை இழுத்துச் சென்றதாக வைத்திருப்பார். இதை ஒரு பேட்டியில் கூட கமல் கூறி இருக்கிறார். தற்போது கமல் அளித்திருக்கும் அந்த பேட்டி வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement