சென்றாயன் எவிக்சனில் நடந்தது என்ன..? திரைக்கு பின் கமல் செய்த செயல்.! திடுக்கிடும் தகவல்.!

0
380
kamal

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சென்ற வாரம் ஐஸ்வர்யா காப்பற்றபட்டு சென்ராயன் வெளியேற்றபட்டத்தை அடுத்து கமல் மீதும் மிக் பாஸ் நிகழ்ச்சி மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஐஸ்வர்யா காப்பற்றபட்டதற்கு காரணம் மக்கள் சரியாக வாக்களிக்காதது தான் காரணம் என்று கமல் மக்களை குறை கூறி இருந்தார்.

kamal

இதனால் பிக் பாஸுடன் சேர்ந்து கமலும் , ஐஸ்வர்யாவை காப்பற்றி வருகிறார் என்று கமல் மீதும் மக்கள் பல்வேறு குற்றசாட்டுகளை வைத்தார். ஆனால், சென்ராயனின் பெயரை அறிவித்தபோது, கமல் அவர்கள் இது நான் எதிர்பார்த்தது இல்லை என்று தான் கூறியிருந்தார். அதே போல ஐஸ்வர்யாவின் பெயர் அடுத்த வார நாமினேஷனில் இடம் பெற வேண்டும் என்றும் பிக் பாஸிற்கு பரிந்துரையும் செய்தார்.

கமல் தன் மீது இருக்கும் தவறை மறைக்க கண் துடைப்பிற்காக தான் ஐஸ்வர்யா மீது கோவம் இருப்பது போல நடந்து கொண்டார் என்று பலரும் கூறிவந்தனர். ஆனால், உண்மையில் பிக் பாஸ் மேடையில் கமல் ஞாயிற்று கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கடுமையாக பேசியுள்ளார் என்று நிகழ்ச்சியை நேரில் பார்த்த சிலர் டீவீட் செய்துள்ளனர்.

Sendrayan

சென்ராயன் நாமினேட் ஆனதை அறிந்து கமல் பிக் பாஸ் குழுவிடும் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்துள்ளார். அத்தோடு நிகழ்ச்சியில் இருந்து சென்ராயன் வெளியேறியதை சற்றும் விரும்பாத கமல் எலிமினேஷனில் சென்ராயன் பெயரை அறிவித்துவிட்டு அந்த அட்டையை கோபத்துடன் தூக்கி போட்டு விட்டார் என்று ட்விட்டரில் நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் சிலர் ட்வீட் செய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் ஞாயிற்று கிழமை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல், மும்தாஜ் மற்றும் ஐஸ்வர்யாவை சற்று கடுமையாக பேசியது போல காண்பிக்கபட்டிருந்தது.ஆனால், உண்மையில் நாம் பார்த்ததை விட மிக அதிமாக இருவரையும் வறுத்தெடுத்திருந்தார் என்றும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

KAML

கடந்த வாரம் சென்ராயன் வெளியேற்றபட்டது கமலுக்கு துளியும் விருஒப்பமில்லை என்றும் சென்ராயன் வெளியேற்றபட்டதால் அவருக்கு பிக் பாஸ் குழுவிடம் பேசி அதிக சம்பளத்தை கமல் பெற்றுத்தந்தார் எனவும் ட்விட்டரில் சில செய்திகள் பரவி வருகிறது.