நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்திய அளவில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சியை முதன்முதலில் ஹிந்தியில் தான் ஒளிபரப்பி இருந்தார்கள். அதற்குப் பிறகுதான் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன் களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சி பல பெயரின் கேரியருக்கு துணையாக நின்று இருக்கிறது. பல பேரின் வாழ்க்கையையும் மாற்றி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடும் பிரபலம். இந்த பிக் பாஸ் வீட்டை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.
கமல் பதிவு:
இந்நிலையில் கடந்த ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதில், கனத்த இதயத்துடன் இதை அறிவிக்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த பயணத்தில் இருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா கமிட்மெண்ட்ஸ் காரணமாக இந்த சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியாது. உங்கள் இல்லங்களுக்கு வந்து உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
பிக் பாஸ் – கமல் விலகல்:
நீங்கள் அன்பும், பாசமும் என்னிடம் நிறைய காட்டினீர்கள். அதற்காக நான் எப்போதும் உங்களுக்கு நன்றி உணர்வோடு இருப்பேன். மேலும், நீங்கள் காட்டுகின்ற தீவிர ஆதரவே பிக் பாஸ் தமிழை இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக மாற்றி உள்ளது என்று கூறியுள்ளார். ஒரு தொகுப்பாளராக என் வாழ்க்கையில் கற்றுக் கொண்டதை நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேர்மையாக பகிர்ந்து கொண்டேன்.
நன்றியோடு இருப்பேன்:
மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன் அதற்காக எப்போதும் நன்றியுணர்வுடன் இருப்பேன். உங்கள் ஒவ்வொருவருக்கும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களையும் இந்த போட்டிக்காக நேரத்தை ஒதுக்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடைசியாக விஜய் டிவியின் அற்புதமான குழுவிற்கும், இந்த நிகழ்ச்சியை மாபெரும் வெற்றியடைய செய்ததில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நபருக்கும் நான் எனது மனமார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கமல் குறித்து:
‘பிக் பாஸ் 8’ சீசனும் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று நான் உறுதியாக இருக்கிறேன் என்று அறிக்கையில் கமல் கூறியுள்ளார். கடைசியாக நடிகர் கமல் நடிப்பில் ‘இந்தியன் 2’ படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதனைத் தொடர்ந்து நடிகர் கமல் பல படங்களில் நடிக்க உள்ளார். அதற்காக டேட்ஸ் காரணமாக கமல், பிக் பாஸ் 8 சீசனில் இருந்து விலகியுள்ளார் என்று தெரிகிறது.