ஜெய் பீம் படத்தை பாராட்டிய கமல் – தேவர் மகன் வசனத்தின் மூலம் பதில் அளித்த சூர்யா (ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா)

0
704
surya
- Advertisement -

ஜெய் பீம் படத்தை பாராட்டிய கமலுக்கு, தேவர் மகன் வசனத்தின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் சூர்யா. சூரரை போற்று என்ற வெற்றிப் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு Ott ரிலீஸ் மூலம் வந்திருக்கிறது சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படம். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு அசோக் செல்வனை வைத்து ‘கூட்டத்தில் ஒருவன்’ என்ற படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் லிஜோமோல் ஜோஸ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், இளவரசு என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார், எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பழங்குடியினர் உரிமைகளைப் பற்றிப் பேசும் பல படங்கள் வந்திருக்கு. அப்படி வெளியான படங்கள் எல்லாமே காடுகளில் வாழும் பழங்குடியினர் பத்தி தான் இருந்தது. ஆனால், முதல் முதலாக சமவெளியில் வாழ்ந்த பழங்குடியினர் பற்றி பேசின படமாக ஜெய் பீம் படம் அமைந்திருக்கிறது. ஜெய் பீம் படத்தில் சொல்லப்பட்ட பழங்குடியினர் கதை அப்படியே உண்மையாக நடந்த கதை தான். இந்த படத்தை பார்த்துவிட்டு பல பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பார்த்துபிட்டு பாராட்டி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த கமல்., ஜெய் பீம்’ பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா, படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் என்று தெரிவித்து இருந்தார்.

மறுபடியும் மொதல்ல இருந்தா ..யாருடா இப்படி கிளப்பிவிட்டது .. | devar magan  part 2 is a long time talk of tamil cinema industry - Tamil Filmibeat

இப்படி ஒரு நிலையில் கமலின் இந்த பாராட்டிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதில் அளித்த சூர்யா, ‘நீங்கள் வகுத்த பாதை… விதை நீங்க போட்டது! உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றி ‘கமல் நடித்த தேவர் மகன் படத்தில் வரும் மிகவும் பிரபலமான வசனத்தை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். ஏற்கனவே கமல் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து தேவர் மகன் 2 வில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலர் ஆசைப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement