35 ஆண்டுகளை நிறைவு செய்த சத்யா : சண்டைக்காட்சியில் கமலை மடக்கிய போலீஸ்

0
427
- Advertisement -

சத்யா படத்தின் படப்பிடிப்பில் கமலை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல்லாண்டு காலமாக உலக நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் கமல் நடிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று தான் சத்யா.

-விளம்பரம்-

இந்த படம் இந்தியில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த அர்ஜுன் படத்தின் ரீமேக் தான். இந்த படத்தில் சன்னி தியோல், டிம்பிள் கபாடியா நடித்திருந்தார்கள். இந்த படத்தை இயக்குனர் ராகுல் ரவைல் தான் இயக்கியிருந்தார். இந்த படம் தான் தமிமிழில் சத்யா என்று எடுக்கப்பட்டது. இந்த படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்திருந்தது. இயக்குனர் கே பாலச்சந்திரிடம் உதவி இயக்குனராக இருந்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தான் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

- Advertisement -

சத்யா படம்:

இந்த படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகம் ஆகியிருந்தார். மேலும், இந்தியில் தாடி, மீசை இல்லாமல் சன்னி தியோல் மிரட்டி இருப்பார். ஆனால், தமிழில் ஒட்ட வெட்டிய தலை முடி, லேசான தாடி, கழுத்தில் கயிறு கையில் காப்பு மடித்து விடப்பட்ட அறைக்கை சட்டை என்று ஒரு புது லுக்கில் கமலஹாசன் நடித்திருப்பார். இந்த படத்திற்கு பிறகு இளைஞர்கள் பலருமே கமல் கெட்டப்பில் தான் இருந்தார்கள் என்றே சொல்லலாம்.

படம் குறித்த தகவல்:

சத்யா படத்தில் கமலுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். இவர்களுடன் படத்தில் நாசர், ராஜேஷ் கிட்டி, ஜனகராஜ், வடிவுக்கரசி, நடராஜன், ஆர் எஸ் சிவாஜி, கவிஞர் வாலி, டெல்லி கணேஷ் என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தினுடைய சண்டைக் காட்சிகளை எல்லாம் விக்ரம் தர்மா அமைத்திருந்தார். இந்த நிலையில் பொதுமக்கள் கூடியிருக்கும் பஸாரில் இந்த படத்தினுடைய சண்டைக் காட்சி ஒன்று எடுக்கப்பட்டது.

-விளம்பரம்-

கமலை விசாரித்த போலீஸ்:

அப்போது அந்த பகுதி மக்களுக்கு தெரியாமலேயே கேண்டிட் முறையில் எடுத்திருப்பார்கள். போலீஸிடம் ஏற்கனவே அனுமதி வாங்கி படமாக்கப்பட்ட காட்சியில் கமல் கார் கண்ணாடிகளை உடைப்பதை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து ஓடி விடுவார்கள். ஆனால், இது தெரியாமல் புதிதாக வந்த போலீஸ்காரர் ஒருவர் கமலை பிடித்து மடக்கி விட்டார். அதற்குப் பிறகு படப்பிடிப்பு என்று சொன்ன பிறகு தான் அவர் கமலை விட்டார். பின் பல இடங்களில் கேமராவை வைத்து எடுக்கப்பட்டது எல்லாம் காண்பித்தார்கள். அந்த சண்டை காட்சி மிகப்பெரிய அளவில் வரவேற்பும் பெற்றது.

கமல்ஹாசன் திரைப்பயணம்:

1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி எம்ஜிஆர் மரணம் அடைந்திருந்தார். இந்த படத்தை எம்ஜிஆருக்காக சமர்ப்பணம் செய்திருந்தார்கள். 1988 ஆம் ஆண்டு அதே தேதியில் இந்த படம் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் விக்ரம். இந்த படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் பகத் பாஸில், விஜய் சேதுபதி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்திருந்தது. இதனை எடுத்து தற்போது பல படங்களில் கமலஹாசன் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்

Advertisement