அசையும் சொத்து இத்தனை கோடி, அசையா சொத்து இத்தனை கோடி, கடன் மட்டும் இத்தனை கோடி – வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள கமல்.

0
1943
kamal
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக உலக நாயகன் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மையத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று முதல்முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

-விளம்பரம்-

பொதுவாக வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் தங்களின் சொத்து விவரகங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதி. அந்த வகையில் இன்று (மார்ச் 15) கமல் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 45 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 178 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனக்கு கடனாக 50 கோடி ரூபாய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்த கமல்  ஜனநாயக கடமையினை கட்சி தலைவனாக செய்யும் அரிய வாய்ப்பினை தேர்தல் ஆணையம் கொடுத்து இருக்கின்றது. இது என் முதல் தேர்தல். என்னுடைய தேர்தல் வியூகம் நேர்மைதான், எங்களிடம் இருக்கும் இந்த நேர்மை மற்றவர்களிடம இருக்காது. எங்களின் திட்டத்தையும் செழுமையும் நம்பியே களமிறங்கி இருக்கின்றோம் என்று கூறி இருக்கிறார்.

பொதுவாக வேட்பு மனு தாக்கல் செய்யும் போது பிரமாணப் பத்திரத்தில் இருக்கும் சொத்துக்களை விட மிகவும் குறைத்து காண்பிப்பது என்பது வழக்கமான ஒன்று தான் இது பெரும்பாலான அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும். ஆனால், இத்தனை ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கிய கமலுக்கு வெறும் இத்தனை கோடி சொத்துக்கள் தான் இருக்கிறது என்பதை பலரும் நம்ப முடியவில்லை.

-விளம்பரம்-
Advertisement