பெண்களின் உணர்வுகளில் விளையாடிய கவின்.! கண்டித்த கமல்.! இன்றைய ஹைலைட்.!

0
5700
kavin

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் தான் ப்ளே பாயாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் அபிராமியிடம் ஜொல்லு விட்டுக் கொண்டிருந்த கவின், அதன் பின்னர் சாக்ஷியுடன் திருமணம் பற்றி எல்லாம் பேசி இருந்தார். ஆனால், தற்போது தனது முழு கவனத்தையும் லாஸ்லியாவிடம் தான் திருப்பியுள்ளார். இதனால் எப்போதும் லாஸ்லியாவின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதிலேயே இருக்க பல சேட்டைகளை செய்து வருகிறார்.

ஆனால், கடந்த சில நாடளுக்கு முன்னர் லாஸ்லியா, கவினிடம் எனக்கு உன் மீது காதல் எல்லாம் கிடையாது என்று தெள்ளத்தெளிவாக கூறிவிட்டார். இதனால் மீண்டும் கவின், சாக்க்ஷியிடம் நெருக்கமாக பேசத் துவங்கிவிட்டார். என்னதான் கவின், இதை எல்லாம் நான் வெறும் ஜாலிக்காக செய்கிறேன் என்று சொன்னாலும் பார்ப்பவர்களுக்கு அவர் பெண்களிடம் வழிவது போல தான் தெரிகிறது.

இதையும் பாருங்க : இந்த சீசனின் முதல் குறும்படமே சாக்க்ஷிக்கு தான்.! வசமாக மாட்டிய சாக்க்ஷி.! 

- Advertisement -

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் சாக்க்ஷி இருவருக்கும் ஏதோ காதல் இருப்பது போல பில்ட்டப் கொடுத்து வருகின்றனர். ஆனால், ஒரு கட்டத்தில் கவின், சாக்ஷியுடன் மிகவும் நெருக்கமாக பழகியதால் சாக்க்ஷிக்கு கவின் மீது அதிக பாசத்தை வைத்து விட்டார். ஆனால், கவின் மற்ற பெண்களிடம் பழகுவது போலவே சாக்க்ஷியிடமும் பழகிவந்தார். அதிலும் சாக்க்ஷியை விட லாஸ்லியாவிடம் அதிகம் பேசி வந்ததால் கடுப்பானசாக்க்ஷி கவினிடம் கோபித்துக் கொண்டார்.

ஒரு கட்டத்தில் அவனிடம் பேசாமல் இருந்த சாக்க்ஷி நேற்றைய நிகழ்ச்சியில் கவினை எண்ணி மிகவும் வருத்தப்பட்டு அழுதார். ஆனால், இவர்கள் இருவருக்குள்ளும் என்ன நடந்தது என்பதுதான் மிகவும் மர்மமாகவே இருந்து வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் கூட மற்ற போட்டியாளர்கள் அனைவருமே கவினைத்தான், நீ செய்தது மிகவும் தவறு என்று சுட்டிக் காட்டியிருந்தனர். இதனால் கவின் செய்தது தான் தவறு என்று மற்ற அனைத்து போட்டியாளர்கள் முன்பும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். அதன்பின்னர் கழிவறைக்கு சென்ற பின் கண்ணீர்விட்டு அழ ஆரம்பித்து விட்டா.ர் கவின் இப்படி பெண்களின் உணர்வுகளோடு விளையாடியதை தான் இன்று கமலஹாசன் சுட்டிக்காண்பித்து தமிழ் கவிதை வறுத்தெடுத்தாராம்.

-விளம்பரம்-
Advertisement