லாக் டவுன் நேரத்தில் பணக் கஷ்டத்தால் 2000 ரூபாய்க்கு நடிக்கப் போனேன் என்று கமலின் முன்னாள் மனைவி அளித்திருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். இதனிடையே கமலஹாசன் அவர்கள் சரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவரை விட்டு பிரிந்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இந்நிலையில் லாக் டவுன் நேரத்தில் சரிகா பட்ட கஸ்டங்களை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். சரிகா டெல்லியை சேர்ந்தவர். சரிகா தன்னுடைய ஐந்து வயதிலேயே சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். பின் 1967ம் ஆண்டு முதல் ஏகப்பட்ட இந்தி படங்களில் இவர் நடித்து இருக்கிறார். மேலும், Parzania எனும் ஆங்கிலப் படத்தில் சரிகா நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றிருந்தார். கமலஹாசனின் ஹே ராம் படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருதையும் சரிகா பெற்றிருந்தார்.
கமல்-சரிகா திருமணம்:
அதுமட்டும் இல்லாமல் கமலஹாசனின் டிக் டிக் டிக் என்ற படத்தில் சரிகா சேர்ந்து நடித்திருந்தார். அந்த படத்தின் போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு 1988 ஆம் ஆண்டு நடிகை சரிகாவை கமலஹாசன் திருமணம் செய்திருந்தார். திருமணத்துக்கு பிறகு சரிகா சென்னைக்கு வந்தார். கமலஹாசன் மற்றும் சரிகா தம்பதியினருக்கு பிறந்த மகள்கள் தான் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். பின் சரிகா நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி இருந்தார்.
கமல்-சரிகா பிரிவு:
அதோடு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் வளர்ந்து ஆளாக வேண்டிய நிலையில் குடும்ப பாரத்தைச் சுமந்தார் சரிகா. மேலும், 1988ஆம் ஆண்டு திருமணமாகி சினிமாவுக்கு குட்பை சொன்ன சரிகா 1997ம் ஆண்டு மீண்டும் ஆக்ரி சங்குர்ஷ் எனும் இந்தி படத்தில் நடிக்க ஆரம்பித்தார். பின் 2003 ஆம் ஆண்டு புன்னகை பூவே எனும் தமிழ் படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும் இருவரும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2004 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு சரிகா ஆங்கிலம், இந்திப் படங்களில் மட்டும் நடித்து வந்திருந்தார்.
சரிகா அளித்த பேட்டி:
அதுமட்டுமில்லாமல் 2014ஆம் ஆண்டு வந்த யுத் எனும் சீரியலில் அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடித்து இருந்தார் சரிகா. இந்த நிலையில் நடிகை சரிகா லாக் டவுன் நேரத்தில் காசுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு இருந்ததாக பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, என்னுடைய இரு மகள்களும் பெரிய பெண்ணாக மாறி சினிமாவில் நடிகையாக வலம் வரும் நிலையில் நான் கஷ்டப்பட்டேன். ஆரம்பத்தில் நான் தியேட்டர் ஆர்டிஸ்ட். நான் மீண்டும் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறேன். சுமார் ஐந்து ஆண்டுகளாக நாடகங்களில் நடித்து வருகிறேன். ஒரு நாளைக்கு 2000 ரூபாய் முதல் 2700 ரூபாய் வரை தருவார்கள்.
சரிகா நடிக்கும் வெப்சீரிஸ் :
அதை வைத்து தான் கடந்த 5 ஆண்டுகளாக என்னுடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வருகிறேன் என்று சரிகா கூறி இருந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் தற்போது இவர் புதிதாக வெளியாக இருக்கும் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார். இயக்குநர் அலங்க்ரிதா ஸ்ரீவத்சவா இயக்கத்தில் அமேசான் பிரைமில் வரும் மே 13ம் தேதி ஒளிபரப்பாகவுள்ள ஆந்தாலஜியில் சரிகா நடித்துள்ளார். அதோடு மே 15ம் தேதி கமல்ஹாசன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.