எனக்கு 60, அவனுக்கு 30 – பணக் கஷ்டத்தால் தவித்து வரும் கமலின் முன்னால் மனைவி. இப்படி ஒரு சர்ச்சைக்குரிய ரோலில் நடித்துள்ளார் பாருங்க.

0
174
sarika
- Advertisement -

கமலின் முன்னாள் மனைவி சரிகா நடித்திருக்கும் ஆந்தாலஜி திரைப்படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். கமலஹாசன் அவர்கள் சரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவரை விட்டு பிரிந்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நடிகை சரிகா டெல்லியை சேர்ந்தவர். சரிகா தன்னுடைய ஐந்து வயதிலேயே சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர். பின் 1967ம் ஆண்டு முதல் ஏகப்பட்ட இந்தி படங்களில் இவர் நடித்து இருக்கிறார். மேலும், Parzania எனும் ஆங்கிலப் படத்தில் சரிகா நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றிருந்தார்.

-விளம்பரம்-

பின் கமலஹாசனின் ஹே ராம் படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருதையும் சரிகா பெற்றிருந்தார். அதுமட்டும் இல்லாமல் கமலஹாசனின் டிக் டிக் டிக் என்ற படத்தில் சரிகா சேர்ந்து நடித்திருந்தார். அந்த படத்தின் போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு 1988 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்திருந்தார். திருமணத்துக்கு பிறகு சரிகா சென்னைக்கு வந்தார். கமலஹாசன் மற்றும் சரிகா தம்பதியினருக்கு பிறந்த மகள்கள் தான் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். பின் சிறிது காலம் பிரேக் எடுத்த சரிகா 1997ம் ஆண்டு மீண்டும் ஆக்ரி சங்குர்ஷ் எனும் இந்தி படத்தில் நடிக்க ஆரம்பித்தார். மேலும், 2003 ஆம் ஆண்டு புன்னகை பூவே எனும் தமிழ் படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

கமல்-சரிகா விவாகரத்து:

இருந்தாலும் கமல்-சரிகா இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு சரிகா ஆங்கிலம், இந்திப் படங்களில் மட்டும் நடித்து வந்திருந்தார். அதுமட்டுமில்லாமல் 2014ஆம் ஆண்டு வந்த யுத் எனும் சீரியலில் அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடித்து இருந்தார் சரிகா. தற்போது சரிகா “Mordern Love Mumbai” ஆந்தாலஜி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் அமேசன் பிரைமில் நேற்று வெளியானது. இது ஆறு விதவிதமான காதல் கதைகளை கொண்ட படம். மேலும், இதில் வரும் குறும்படங்கள் விவகாரமாக இருந்தாலும் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மாடன் லவ் மும்பை திரைப்படம்:

மாடன் லவ் மும்பை என்ற தலைப்பில் விஷால் பரத்வாஜ், ஹன்சல் மேத்தா, ஷோனாலி போஸ், துருவ் சேகல், அலங்கிரிதா ஸ்ரீவஸ்தவா மற்றும் நூபுர் அஸ்தானா என ஆறு இயக்குநர்கள் இணைந்து வித்தியாசமான ஆறு காதல் கதைகளை இதில் விவரித்து இருக்கின்றனர். மேலும், இந்த ஆந்தாலஜியில் ‘மை பியூட்டிஃபுல் ரிங்கில்ஸ்’ என்ற குறும்படத்தில் தான் கமலின் முன்னாள் மனைவி சரிகா நடித்து இருக்கிறார். இதில் 60 வயதான சரிகாவை 30 வயது இளைஞன் காதலிக்கிறான். இதுதான் இந்த திரைப்படத்தின் ஒன் லைன். இதில் தனேஷ் ரஸ்வி மற்றும் அஹ்சாஸ் சன்னா ஆகியோர் நடித்து இருக்கின்றனர். அலங்கிரிதா ஸ்ரீவஸ்தவா இந்த குறும்படத்தை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

மை பியூட்டிஃபுல் ரிங்கில்ஸ்’ என்ற குறும்படம்:

படத்தில் கணவனை விபத்தில் பறிகொடுத்த சரிகா அவரின் நினைவுகளுடன் வாழ்ந்து வருகிறார். அப்போது குணால் என்ற இளைஞனுடன் நட்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அந்த இளைஞன் சரிகாவை வர்ணித்து இறுதியில் தன் மனதில் இருக்கும் காதலை சொல்லி விடுகிறான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சரிகா கடுமையாகக் கண்டிக்கிறார். ஆனால், சரிகாவின் மனது குணாலை தேடுகிறது. இது சரியா? தவறா? எனக்கு 60 அவனுக்கு முப்பது என பல கேள்விகள் சரிகா மனதுக்குள் வருகிறது. இறுதியாக சரிகா ஒரு முடிவு எடுத்து குணாலை மீண்டும் வீட்டுக்கு அழைக்கிறார்.

படத்தில் சரிகாவின் நடிப்பு:

அதன்பின் ஒரு அழகான திருப்பத்துடன் கதை முடிகிறது. நீண்ட நாட்களுக்குப்பின் சரிகா திரையில் தோன்றி பட்டையை கிளப்பி இருக்கிறார். சரிகா டீன் ஏஜ் பெண்ணாகவே நடித்திருக்கிறார். இந்த கதை விவகாரம் ஆன கதையாக இருந்தாலும் எந்த இடத்திலும் குறையில்லாமல் அதை அழகாக நடித்திருக்கிறார் சரிகா. காதலுக்கும், காதலிப்பவருக்கும் வயது ஒரு தடையில்லை என்பதையும், ஒரே ஒரு வாழ்க்கைதான் இந்த வாழ்க்கையை ரசித்து ருசித்து மகிழ்ச்சியை அனுபவித்து வாழ்ந்து விட வேண்டும் என்பதை தான் மை பியூட்டிஃபுல் ரிங்கில்ஸ் குறும் படத்தில் சொல்லி இருக்கிறார்கள்.

Advertisement