சம்பளம் தர பணம் இல்லை ! பிரபல முன்னணி நடிகருக்கு கை கடிகாரத்தை சம்பளமாக கொடுத்த கமல்

0
930
Actor kamal

நடிகர் கமல்ஹாசனின் கலை தாகம் எந்த அளவுக்கு இருக்கும் என்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றே .சினிமாவிற்காக தனது உடல் பொருள் ஆவி என அத்தனையையும் அற்பணித்தவர் நடிகர் கமல். அவர் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக என்னற்ற வேடங்களில் நடித்துள்ளார்.

Hey_RamHey_Ram

அதுமட்டுமின்றி பல வித்யாசமான கதைகளையும்,நடிப்பையும் மக்களுக்கு அர்ப்பணித்த கமல் அதில் வெற்றி பெற்றிருந்தாலும் அதனால் அவர் இழந்ததே அதிகம்.கமல் எடுத்து விருமாண்டி படம் முதல் விஸ்வரூபம் படம் வரை கமல் எவ்வளவோ போராட்டத்திற்கு பிறகே அந்த படங்களை வெளியிட்டார்.

கமல் எத்தனையோ படங்களை தயாரித்திருக்கிறார் அதில் சில வெற்றிப்படங்களும் இருக்கிறது சில தோல்வியும் அடைந்துள்ளது.மேலும் அவரது மருதனாயாகம் படம் கூட எவ்வளவோ பொருட்செலவில் உருவாகி பின்னர் கைவிடப்பட்டது இதனால் கமலுக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டது.அந்த படத்திற்கு பிறகு கமல் தனது நஷ்டத்தை எடுசெய்துகொள்ள பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.அதன் பிறகு 2000 கமல் ஹேராம் என்னும் படத்தை தயாரித்தார். அந்த படத்தில் முதன் முறையாக பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் ஹேமமாலினியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

shah-rukh-khan

ஆனால் அந்த படத்தில் நடித்ததர்காக ஷாருக்கானிற்கு சம்பளம் தர கமலிடம் பணம் இல்லாத காரணத்தால் ,அதற்கு பதிலாக கமல் வைத்திருந்த ஒரு கை கடிகாரத்தை சம்பளமாக கொடுத்தாராம் .