நடிகர் கமலால் சரிகா தற்கொலைக்கு முயன்ற தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமல்ஹாசன். இவர் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் நடிகர், இயக்குனர், எழுத்தாளர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னட என பல மொழிகளில் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போதும் இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். இப்படி கமல்ஹாசன் தனது கேரியரில் வெற்றி பெற்றாலும், திருமண வாழ்க்கை அவருக்கு கை கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கமல்ஹாசன் திருமணம்:
நடிகர் கமல்ஹாசன் தனது திருமண வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கினார். முதலில் இவர் நடன கலைஞரான வாணி கணபதியை தான் திருமணம் செய்து கொண்டார். கோலிவுட்டில் ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் வாணி கணபதி. அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கமல்ஹாசன் நடித்திருந்தார். பின் இருவரும் காதலித்து 1978 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தனது கணவர் கமல்ஹாசனுக்கு ஆடை வடிவமைப்பாளராக வாணி கணபதி மாறினார். கடைசியில் இவர்களது திருமணம் 1988 விவாகரத்தில் முடிந்தது.
சரிகாவுடன் உறவு:
நடிகர் கமல்ஹாசன், வாணி கணபதியை திருமணம் செய்து கொண்ட போதும், நடிகை சரிதா தாக்கூருடன் உறவில் இருந்தாராம். இவர்களின் முதல் மகள் ஸ்ருதி ஹாசன் 1986ஆம் ஆண்டு பிறந்துள்ளார். ஆனால், 1988 இல் வாணி கணபதியுடன் விவாகரத்து ஆன அதே ஆண்டு கமல்ஹாசன் மற்றும் சரிகா திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சரிகா நடிப்பதை நிறுத்திவிட்டு ஆடை வடிவமைப்பாளராக மாறினார். ஆனால் சில காரணங்களால் 2004ஆம் ஆண்டு இவர்கள் பிரிந்தனர். இடையில் இவர்களுக்கு அக்ஷரா ஹாசன் பிறந்தது குறிப்பிடத்தக்கது.
சரிகா எடுத்த விபரீத முடிவு:
இதற்கிடையில் இவர் நடிகை சரிகா அவர்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். காரணம், கமலஹாசன் கௌதமியுடன் தொடர்பில் இருக்கிறார் என்று தெரிந்தவுடன் கோபத்தில் சரிகா தன்னுடைய வீட்டின் பால்கனியில் இருந்தே குதித்து இருக்கிறார். இதனால் இவருக்கு காயம் அடைந்து மூன்று மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தார். அதற்கு பிறகு தான் சரிகா, கமலஹாசன் இடமிருந்து விலகி சென்று விவாகரத்து பெற்று பிரிந்தார். மேலும், விவாகரத்து குறித்து அளித்த பேட்டியில் சரிகா, நான் கமல்ஹாசனை பிரிய வேண்டும் என்று நினைத்தது ரொம்ப சிறந்த முடிவு என்பேன். சில முடிவுகள் விரைவாக எடுக்க முடியாது. ஆனால், எனது விவாகரத்து முடிவு நன்மைக்காக எடுக்கப்பட்டது.
கமல்-சரிகா பேட்டி:
கமல்ஹாசனை பிரிந்த போது என்னிடம் ஒரு காரும், 60 ரூபாயும் மட்டும் தான் இருந்தது. அப்போது இரவில் என் காரில் தான் தூங்குவேன் என்று கூறி இருந்தார். அதன் பிறகு கமல்ஹாசன் சரிகாவுக்கு ஏன் உதவவில்லை என்ற கேள்வி எழுந்த போது, சரிகா பிறரிடம் உதவி பெறுவதை அவமானமாக நினைப்பார். அதையும் மீறி நான் அவமானமாக செய்தால் என்னை அவமானப்படுத்துவார். யாருடைய உதவியும் இல்லாமல் சொந்த காலில் வாழும் சரிகாவை நினைத்து பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது என்று நடிகர் கமலஹாசன் பேட்டியில் கூறி இருந்தார்அதன் . பிறகு, கமல்ஹாசன் 2005 ஆம் ஆண்டு முதல் நடிகை கௌதமியுடன் சேர்ந்து வாழ்ந்தார். ஆனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த உறவும் முறிந்தது நாம் அனைவரும் அறிந்ததே.